கால்குலேட்டரில் இருக்கும் AC, CE பட்டன்கள் எதற்காக இருக்கிறது?
நாம் நமது வேலைகளை எளிதாக்க பயன்படுத்தும் கால்குலேட்டரில் AC, CE பட்டன்கள் எதற்காக இருக்கிறது என்பதன் காரணத்தை பதிவில் பார்க்கலாம்.
கால்குலேட்டர்
அலுவலகம், கடை அல்லது வீடு என விரைவான கணக்கீடுகளைச் செய்ய பலரும் கால்குலேட்டர்களைப் பயன்படுத்துகிறார்கள்.
பொதுவாக, கால்குலேட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பட்டன்கள் எண்கள், கழித்தல், கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகும். ஆனால், இது தவிர, கால்குலேட்டரில் பல பட்டன்கள் உள்ளன.
அவற்றில் ஒன்று தான் AC மற்றும் CE பொத்தான் ஆகும். பலருக்கும் இது எதற்காக கால்குலக்டரில் உள்ளது என்பது தெரியாது.
சிலருக்கு தெரிந்து இருக்கலாம் அவர்கள் கால்குலக்டர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு நபராக இருப்பார்கள். அந்த வகையில் AC மற்றும் CE போன்ற பட்டன்களின் பயன்பாடு பற்றி பதிவில் பார்க்கலாம்.

AC, CE பட்டன்கள்
கால்குலேட்டரில் உள்ள AC பட்டனின் விரிவாக்கம் All Clear ஆகும். நீங்கள் கால்குலேட்டரில் செய்த கணக்கீடுகளை முழுமையாக அழிக்க விரும்பினால் இந்த AC ( All Clear) பட்டனை அழுத்தலாம்.
கால்குலேட்டரில் உள்ள AC பட்டனை அழுத்தியவுடன், நீங்கள் டைப் செய்த அனைத்து எண்கள், சின்னங்கள் மற்றும் செயல்பாடுகள் அழிந்துவிடும். இதன் பின்னர் கால்குலக்டர் பழைய நிலைக்கு திரும்பும்.

இதற்குப் பின்னர் நீங்கள் ஒரு புதிய கணக்கீட்டைத் தொடங்கலாம். இரண்டாவது பட்டன் CE, அதன் முழு விரிவாக்கம் Clear Entry ஆகும். கடைசி எண்ணை நீக்க விரும்பும் போது Clear Entry பட்டன் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் தவறுதலாக ஒரு எண்ணை டைப் செய்கிறீர்கள் என்றால், முழு கணக்கீட்டையும் அழிக்க CE பட்டனை அழுத்தினால் அந்த எண் மட்டுமே நீங்கும். முழு கணக்கையும் நீக்கி அதை மீண்டும் செய்ய தேவை இல்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |