chanakya topic: இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் வாழ்வில் வறுமையே இருக்காதாம்.... உங்களிடம் இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிர் சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் போர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது.
அந்த வகைளில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட் தகவல்களின் பிரகாரம் வாழ்வில் வறுமையை சந்திக்கவே கூடாது என்றால் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வறுமையை ஒழிக்கும் பழக்கங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் எந்த விடயம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் போதும், அதன் பின்விளைவுகளை பற்றி சரியாக சிந்தித்து முடிவெடுக்கும் பழக்கத்தை கொண்டவர்கள் வாழ்வில் வறுமையை ஒருபோதும் சந்திப்பதே கிடையாது என்கின்றார் சாணக்கியர்.
அப்படி தாங்கள் எடுக்கும் முடிவில் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் இலக்கு நோக்கி முன்னேறும் குணத்தை கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் வறுமையில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்கின்றார் சாணக்கியர்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் வாழ்வில் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் சரியாக செயற்படும் குணம் வாழ்வில் பல பிரச்சினைகளில் இருந்து தங்களை பாதுகாக்கும். வாழ்க்கையை முன்னேற்ற கூடிய நபர்களை நண்பர்களாக வைத்திருப்பவர்கள் வாழ்வில் வறுமையை சந்திப்பது மிகவும் அரிது.
நல்ல நண்பர்கள் சூழ இருக்கும் ஒருவர் வாழ்வில் இலக்குகளை நிச்சயம் அடைந்தே தீருவார். அதனால் இவர்கள் வாழ்வில் நிதி சம்மந்தமான சிக்கல்கள் ஏற்படாது என்கின்றார் சாணக்கியர்.
நாம் தேர்தெடுக்கும் நண்பர்கள் நம்மை ஊக்குவிக்கும் நண்பர்களாக இருக்க வேண்டும், அவர்கள் நம்மை உற்சாகப்படுத்துபவராகவும், நமது சாதனைகளில் மகிழ்ச்சியடைபவராகவும் இருப்பார்களா என்பதை உறுதி செய்த பின்னரே நண்பர்களாக முடிவுசெய்ய வேண்டும்.
சாணக்கியரின் கருத்துப்படி புதிய விஷயங்களை தேடி கற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்கின்றார். நிலையான வெற்றிக்கு தொடர்ச்சியான கற்றலே அடிப்படை மந்திரம் என்கின்றார் சாணக்கியர்.
அதுபோல் உங்கள் ரகசியங்களை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் வாழ்வில் தோல்வியையும் வறுமையையும் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பில்லை என்கின்றார் சாணக்கியர்.
உங்கள் ரகசியங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் மிகவும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கூட தனிப்பட்ட விடயங்களில் ரகசியம் காப்பது அவசியம் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சுயக்கட்டுப்பாடு ஒவ்வெருவர் வாழ்விலும் மிகவும் முக்கியமானது சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும் ஒருவர் வாழ்வில் நிச்சயம் முன்னேற்ற பாதையில் தான் செல்வார் இவர்கள் வாழ்வில் வறுமை ஏற்படுவது அரிது என சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |