சாணக்கிய நீதி: மகிழ்ச்சிக்கான திறவுகோல் இது தான்... என்னென்ன தெரியுமா?
சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் நமது வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், அவசியம் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
சாணக்கியரின் அறிவுரை
சாணக்கிய நீதியில் இருநத திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் வாழ்க்கையில் நீங்கள் எப்படி இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நிச்சயம் உங்கள் மனதுக்கு தெரியும் அதனை சரியான பின்தொடர்ந்தலே வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்கின்றார்.
வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க ஊரோடு ஒத்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருப்பது மகிழ்சியை அழித்துவிடும்.
காட்டில் நேராக வளர்ந்து நிற்கும் மரத்தைத் தான் முதலில் வெட்டுவார்கள் எனவே சில விடயங்கள் உங்களின் விருப்படி நடக்க வேண்டும் என்றால் உங்களின் பிடிவாத குணத்தை விட்டுக்கொடுத்தால் தான் சாத்தியமாகும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
திருமணத்தின் பின்னர் கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி வேண்டும் என்றால், கணவன் மனைவி சிறந்த நண்பர் போல் இருங்கவும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் உலகத்தில் இருப்பதிலேயே பெரிய நோய் காமம் தான் . அதுபோல் அறியாமை தான் நமது மிகப்பெரும் எதிரி இல்லை. கோவத்தை விடக் கொடிய நெருப்பு வேறு இருக்க முடியாது இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவர் வாழ்வில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.
பிறப்பிலேயே பணக்காரனாக இருந்தாலும் நிச்சயம் கல்வி கற்க வேண்டும் என்கின்றார் சாணக்கியர். செல்வம் இருக்கின்றதே என கல்வியில் அக்கறை அற்றவனாக இருப்பது வாழ்ககையை துன்பம் நிறைந்ததாக மாற்றிவிடும்.
அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற நிலையில் கூட கல்வி என்ற ஒரு விடயத்தை கொண்டு அத்தகையும் மீட்டெடுக்க முடியும். வாழ்வில் உண்மையான மகிழ்சியையும் பாதுபாப்பையும் கல்வியால் மட்டுமே கொடுக்க முடியும்.
ஒருவர் எந்தளவுக்கு தனது அறிவை வளர்த்துக்கொள்ள முயற்ச்சி செய்கின்றானோ அந்தளவுக்கு மகிழ்ச்சியான வாழ்வை வாழமுடியும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால், ஆன்மீகத்தை மனதார கடைப்பிடிக்க வேண்டும் இது உங்கள் மனதைத் தூய்மைப்படுத்தி துன்பம் தரும் செயல்களில் இருந்து உங்களை விலக்கிக்கொள்ள தேவையான தெளிந்த சிந்தனையை கொடுக்கின்றது.
சாணாக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் ஒருவர் எந்த அளவுக்கு அதிகமாக கடின உழைப்பை கொடுக்கின்றாரோ, அதைவிட பலமடங்கு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். உழைப்பால் கிடைத்த சிறிய விடயம் கூட பெரிய மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |