கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? சாணக்கியர் சொல்லும் இந்த 4 விஷயங்களைப் பின்பற்றுங்கள்!
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், சிறந்த இராஜதந்திரி மற்றும் தலைசிறந்த பொருளாதார நிபுணராக விளங்கியவர் ஆச்சாரிய சாணக்கியர்.
வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த நடைமுறைகள், சந்தித்த சவால்கள் மற்றும் பெற்ற அனுபவங்களின் தொகுப்பாகவே சாணக்கிய நீதி உருவானது.

ஆச்சாரிய சாணக்கியரின் அறிவுரைகள் இன்றும் மிகவும் பிரபலமாக உள்ளன. ஏனெனில், அவை எக்காலத்திற்கும் ஏற்றவையாகத் திகழ்கின்றன.சாணக்கியர் தனது நீதிகளில் செல்வம் குறித்துப் பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அந்தவகையில், சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், விரைவில் செல்வத்தை சேர்க்க வேண்டும் என்றால் வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இலட்சியம்

வாழ்க்கையில் வெற்றி பெறவும், செல்வம் சேர்க்கவும் முதலில் தெளிவான இலட்சியம் இருக்க வேண்டும். அதிக வருமானம் ஈட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
இலட்சியம் இல்லாமல் வெற்றியோ, செல்வமோ அடைவது கடினம். நேர்மையான வழியில் பணம் சம்பாதித்து, உங்கள் இலக்கில் எப்போதும் கவனம் செலுத்துவது முக்கியம்.
தானம் செய்ய வேண்டும்

சாணக்கியரின் கருத்துப்படி, கோவில்களில் தானம் செய்வது இறைவனின் அருளையும் செல்வ வளத்தையும் பெற உதவும்.அதே நேரத்தில், தானம் செய்வதிலும் அளவு இருக்க வேண்டும்.
அளவுக்கு மீறி தானம் செய்தால் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, தன் வசதிக்கு ஏற்ற அளவில் தானம் செய்வது செல்வ செழிப்பை அதிகரிக்கும் என சாணக்கியர் அறிவுறுத்துகின்றார்.
நல்ல சூழலில் வாழ வேண்டும்

செல்வந்தர்கள், வியாபாரிகள், கல்வியறிவு பெற்றவர்கள், மருத்துவர்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள இடங்களில் வாழ்வது முன்னேற்றத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழல் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்து, பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். அதேசமயம், வாய்ப்புகள் குறைவான இடத்தில் வாழ்வது வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.
சேமித்து முதலீடு செய்ய வேண்டும்

உலகின் பெரிய செல்வந்தர்கள்கூட சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுபோல நாமும் வருமானத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிக்க வேண்டும். அவசர காலங்களில் இந்த சேமிப்பு பெரிய ஆதரவாக இருக்கும்.
தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, சேமித்த பணத்தை எதிர்கால தேவைகள் மற்றும் நல்ல முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான பழக்கம். இந்த விடயம் தொன்று தொட்டு பணக்காரர்கள் பின்பற்றும் முக்கிய உத்தியாகவும் அறியப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |