பாம்புகளை ஈர்க்கும் 4 வாசனைகள் என்னென்ன தெரியுமா?
இந்த வாசனைகள் இருந்தால் உங்கள் வீட்டை சுற்றி இருந்தால் பாம்புகள் வர வாய்ப்புள்ளதாம்.
4 வாசனைகள்
மழைக்காலங்களில் பொதுவாக பாம்புகள் வீட்டை சுற்றி வரும் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், நம் வீட்டை சுற்றி இருக்கும் சில தவறான சூழ்நிலைகள், பாம்புகளை அடிக்கடி வீட்டை சுற்றி வர வைக்கும்.
உணவு அல்லது தங்குமிடத்திற்கான சில சமிக்ஞ்சையான வாசனைகளை பாம்புகள் பயன்படுத்துவதால், இந்த வாசனைகள் இருப்பின் பாம்புகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.
தண்ணீர் இருக்கும் இடத்தை சுற்றி பாம்புகள் இருக்கும் என்று நம்பப்படும் நிலையில் இந்த 4 வாசனைகள் காந்தம் போல பாம்புகளை ஈர்க்கின்றன.
பாம்புகள் எலிகளை உண்பதால் உங்கள் வீடுகளை சுற்றி எலி சிறுநீர் மற்றும் எச்சத்தின் வாசனை இருந்தால் பாம்பு வருவதற்கு வாய்ப்புள்ளது.
அடுத்ததாக, பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகளை பாம்புகள் உண்ணும் என்பதால் அவற்றின் எச்சங்களின் வாசனைகள் பாம்புகளை ஈர்க்கும். மேலும், பறவைகளுக்கு அதிகமாக உணவளிப்பதும் அவற்றை ஈர்க்கும் என்று கவனத்தில் கொள்ளுங்கள்.
மீன்கள் மற்றும் நீரில் வாழும் சில உயிரினங்களை பாம்புகளை உண்ணும் என்பதால் உங்கள் வீட்டருகில் ஏரி, குளங்கள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
பாம்புகள் பெரோமோன்கள் மூலம் மற்ற பாம்புகளை ஈர்ப்பதால் நீர் ஆதாரங்கள் போன்ற விடயங்களை தவிர்க்க வேண்டுமாம்.
