வெஸ்டர்ன் டாய்லெட் ஆரோக்கியத்தை பாதிக்குமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்திய கழிப்பறை மற்றும் வெஸ்டன் கழிப்பறை என இரண்டு விதமான கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றோம்.
வளர்ந்து வரும் நாகரீகத்திற்கு ஏற்ப மேலை நாட்டு காலச்சாரத்தின் மீது ஏற்பட்டுள்ள மோகம் காரணமாக வெஸ்டன் கழிப்பறையை பலர் விரும்புகின்றனர். அதனால் இந்திய முறையிவலான கழிப்பறை பலரும் பயன்படுத்துவது அருகிவிட்டது.
பாதக விளைவுகள்
தற்காலத்தில் செரிமான கோளாறுகளை அதிகரித்தமைக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதற்கும் இந்த வெஸ்டன் கழிப்பறையை பயன்படுத்துவது தான் காரணம் என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது எந்தளவிற்கு உண்மை என்பது குறித்தும் அவ்வாறு பிரச்சிகைள் ஏற்பட என்ன காரணம் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே இந்திய கழிப்பறைகளை பயன்படுத்தும் போது நமது உடல் 35 பாகையில் இருக்கும் இதனால் குடல் பகுதி நேராக இருக்கின்றது இதன் காரணமாக குடலில் இருந்து மலம் முழுமையாக வெளியேற்றப்படுகின்றது.
இந்திய கழிப்பறையில் அமரும் விதம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் கை கால்களுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்று கூறப்படுகிறது. இது குடல், வயிறு போன்ற உடல் பாகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
குந்துதல் முறை ஒரு ஆசனம் என்று கூட யோகா கலை குறிப்பிடுகின்றது. ஆனால் வெஸ்டன் கழிப்பறைகளை பயன்படுத்தும் போது நமது உடல் 90 பாகையில் இருக்கின்றது.
இது நாம் சாதாரணமாக கதிரையில் அமரும் நிலையை போன்றே இருப்பதனால் குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படுவது இல்லை.
இது மட்டுமன்றி இது மூளையை பொருத்தவரையில் சாதாரணமாக அமர்ந்திருக்கும் நிலையை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதால் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டுவது குறைவாக காணப்படுகின்றது. இதனால் தற்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சினை அதிகரித்து விட்டது, என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |