பிளாஸ்டிக் பாவனை உயிராபத்தை ஏற்படுத்துமா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைரும் அதிகளவில் பயன்படுத்தும் பொருட்களுள் பிளாஸ்டிக் முக்கிய இடம் பிடித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.
பிளாஸ்டிக் பொருட்களின் ஆயுள் காலம் அதிக ஆண்டுகள் என்பதால் அவை மக்குவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது.
அதனை மண்ணில் புதைத்தாலும் மறுசுழற்சி செய்தாலும் அதில் அடங்கியுள்ள நச்சு தன்மை ஒருபோதும் குறைவதில்லை.
இது சூழலுக்கும் மனிதர்களுக்கும் நேரடியாக தீங்கு விளைவிக்கின்ற போதிலும் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர சற்றும் குறைவதில்லை என்பதே வருந்தத்தக்க விடயம்.
உயிராபத்தை ஏற்படுத்துமா?
மிக நுண்ணிய அளவில் நிலத்தில் பிளாஸ்டிக் காணப்பட்டாலும் பிளாங்டன் உட்பட பல தாவரங்களையும் நுண்ணுயிர்களையும் அழித்துவிடுகின்றது.
இதனால் அதனை சார்ந்து வாழும் உயிரினங்களும் பாதிப்படைந்து ஒட்டுமொத்த உணவு சங்கிலியும் அறுபடுவதற்கான அபாயத்தை தோற்றுவிகின்றது.
மேலும் வெட்ட வெளியில் ஏறியூட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதால் இதனை சுவாசிக்கும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சுவாச கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
பிளாஸ்டிக் எனப்படுவது மனிதர்களால் பல்வேறு வேதிப்பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சு பொருளாகும்.
இதனை தொடர்ச்சியாக பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இதன் பாவணை புற்றுநோய் மற்றும் சுவாசப்பை அழற்சி போன்ற உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்த கூடியது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |