வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை பதிவு
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் வெஸ்டர்ன் கழிப்பறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். மேற்கத்திய கலாச்சாரத்தில் காணப்பட்ட இவை இந்தியாவில் அதிகமான வீடுகளில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள், மீண்டும் மீண்டும் எழுந்து உட்காருவதில் சிரமம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த கழிவறைகள் காணப்படுகின்றது.
ஆனால் இதில் பல தீமைகளும் காணப்படுகின்றது. இதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்களின் கருத்து என்பது, மூ்ட்டு வலியில்லாமல் இருப்பவர்கள் இந்திய கழிவறையை பயன்படுத்துவதே சிறந்தது என்று கூறுகின்றனர்.
இந்திய கழிப்பறையைப் பயன்படுத்துவது செரிமான அமைப்பிற்கும் நன்மையை கொடுப்பதுடன், வயிறு முழுவதும் சரியாக சுத்தம் செய்யப்படுகின்றது.
மேலும் மூலம், தொற்றுநோய் அபாயம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேற்கத்திய கழிப்பறையின் 2 முக்கிய தீமைகள்:
மேற்கத்திய கழிவறையான வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துவது நோய்தொற்று அபாயம் ஏற்படும். மேலும் இந்த கழிவறையை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்படுகின்றது. மருத்துவர்கள் இம்மாதிரியான கழிவறையில் அமர்வதற்கு முன்பு டாய்லெட் பேப்பர் அல்லது டிஷ்யூ விரித்து பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.
மேலும் இந்த டாய்லெட்டை பயன்படுத்துவதால் ஈ.கோலி தொற்று, புரோட்டஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பொது கழிப்பறையை பயன்படுத்துவதால் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.