இரவில் நிம்மதியாக தூக்கம் வேண்டுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க
இரவு தூக்கம் தடைபடும் நிலை இருந்தால் தூங்க செல்லும் முன்பு சில செயல்களை செய்தால் நல்ல நித்திரையை பெற முடியும்.
தூக்கம்
பொதுவாக ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் என்பது மிகவும் முக்கியமாகும். மனித ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் அவசியம்.
அவ்வாறு தூக்கம் இடையில் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இரவு நேரத்தில் எந்தவொரு தொந்தரவு இல்லாமல் தூங்கினால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

மேலும் அவ்வாறு தூங்கினால் தான் மறுநாள் காலையில் சுறுசுறுப்பாக நமது வேலையினை செய்ய முடியும். இரவில் சரியான தூக்கம் இல்லையெனில் மறுநாள் சோர்வாகவே காணப்படுவோம்.
இதனால் வேலைகளும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான தூக்கத்தில் இரவு தொந்தரவு ஏற்பட்டால், நமது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
சரியான நேரத்தில் படுத்து சரியான நேரத்திற்கு எழும்ப பழகிக் கொள்ள வேண்டும்.
தூங்கும் முன்ணுபு தொலைக்காட்சி, செல்போன் பார்ப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இருட்டான அறையில் செல்போனை பயன்படுத்தினால் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் அருகில் வைத்தும் பார்க்கக்கூடாது. இவை தூக்கத்தை கெடுக்கின்றது.

தூங்கும் முன்பு தேநீர், காப்பி, மது மற்றும் பரோட்டா போன்ற கனமான உணவினை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
படுக்கும் அறை எப்பொழுது வெளிச்சமாக இல்லாமல், இருட்டாக இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். ஆகையால் விளக்கை சுவிட் ஆஃப் செய்து கொள்ளவும்.

அதே போன்று இரவு நேரத்தில் வயிறு நிரம்ப சாப்பிடுவது தவறாகும். ஏனெனில் இவை தூக்கத்திற்கு தடையை ஏற்படுத்தும்.
குறைந்த பட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பாட்டை முடித்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிட்ட பின்பு மெதுவான நடைபயிற்சி மேற்கொள்ளவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |