உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா? தினமும் காலையில் இந்த ஒரு பானத்தை குடியுங்கள்;
உடல் எடையை குறைக்க பலரும் பெரும்பாலும் சிரமப்பட்டு, பலவிதமான முயற்சிகளை கையாளுகின்றனர். ஆனாலும் உணவு கட்டுப்பாட்டு முறையை கடைபிடிக்க முடியாமல் உடல் எடையை அதிகரித்துகொள்கின்றனர்.
எனவே உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், இயற்கை முறையில் உணவுகள் பானங்கள் மூலவும் அன்றாடம் கடைப்பிடிப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.
உடல் எடை, கொழுப்பை கரைக்கும் மேஜிக் பானத்தை ஜீரகம் மற்றும் சேம்பு கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகம் மற்றும் சோம்பு கலந்த நீர் குடிக்க வேண்டும். சீரகம் மற்றும் சோம்பு நீர் குடிப்பதன் மூலம், உங்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
மேலும், சீரகம் மற்றும் சோம்பு நீர் ஒரு இயற்கை நச்சு பானமாக செயல்படுகிறது. இது உடலில் சேரும் அழுக்கு மற்றும் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.

நன்மைகள்
எடை இழப்புக்கு முக்கிய காரணமாக சீரகம் மற்றும் சோம்பு கலந்த பானம் வளர்சிதை மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் போது, கலோரிகளை எரிக்க உதவுகிறது.
உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவில் இருந்து பெறுகிறது. இது உடலில் ஆற்றலை தக்க வைக்கிறது.