7 நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்போது இதை செய்தாலே போதும்!
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் உடல் பருமன் ஒரு முக்கிய பிரச்சினையாகவுள்ளது.
இதற்காக சந்தைகள், சமூக வலைத்தளங்கள் என பல பொருட்கள் , ரெபடிகள் என பல வகையான வழிகள் இருக்கிறது. ஆனால் இதில் எந்த வழியில் நம்முடைய பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துள்ளதா? என்பது தான் முக்கியம்.
இது போன்று இருக்கும் பொருட்கள் நம்முடைய உடல் நிலையை குறைக்காது. நம்முடைய உணவு பழக்கங்கள் சீராக இருந்தால் மாத்திரமே உடல் எடையை குறைக்க முடியும். இதனால் மட்டும் தான் நம்முடைய உடல்நிலைக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
அந்த வகையில் சுமார் 7 நாட்களில் உடல் எடையை குறைக்க எப்படியான உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
காலையுணவிற்கான உணவுகள்

1. இரவில் ஒரு கிளாஸ் நீரில் வெந்தயம் போட்டு வைத்த தண்ணீரை காலை எழுந்ததும் குடிக்க வேண்டும். இந்த நீர் உடலில் இருக்கும் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கும் நன்மையளிக்கிறது.
2. இரண்டு முட்டைகள் அல்லது 100 கிராம் குறைந்த கொழுப்பு பனீர் கொண்ட சாண்ட்விச் செய்து, ஒரு கப் காபியுடன் சாப்பிடுங்கள். அல்லது 40 கிராம் ஓட்ஸ் மற்றும் 50 கிராம் குறைந்த கொழுப்புள்ள பனீர் மற்றும் 1 தேக்கரண்டி புதினா கொத்தமல்லி சட்னி அல்லது தயிர் எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற உணவுகள் உடல் எடையை குறைக்க உதவும்.
3. ஒரு கிளாஸ் தேங்காய்த் தண்ணீரைக் குடித்து, ஒரு கப் பருவகால பழங்களைச் சாப்பிட வேண்டும். தேங்காய் தண்ணீரில் தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்கள் அதிகம் இருக்கிறது, இது உடலுக்கும் நன்மையளிக்கிறது.
4. 100 கிராம் குறைந்த கொழுப்புள்ள பனீர் மற்றும் 150 கிராம் கீரையுடன் செய்யப்பட்ட பாலக் பனீர் மற்றும் 30 கிராம் மாவு மற்றும் குறைந்த எண்ணெயில் செய்யப்பட்ட மல்டிகிரைன் ரொட்டி இவற்றை ஒரு வேளை உணவாக சாப்பிடலாம்.
5. 30 கிராம் மல்டிகிரைன் மாவு மற்றும் 50 கிராம் காய்கறிகள் அல்லது 70 கிராம் சிக்கன் அல்லது குறைந்த கொழுப்புள்ள பனீரை டார்ட்டில்லாவை சாப்பிடலாம்.
மதியவேளை

1. விருப்பம் போல் உணவுகளை சாப்பிடலாம் ஆனால் அந்த உணவில் புரதம், கால்சியம், உணவில் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்க வேண்டும்.
மாலை வேளை
1. ஆறு பாதாம் அல்லது மூன்று வால்நட்ஸை எடுத்துக் கொள்ளலாம்.
2.மாலையில் நட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
இரவு வேளை
1.வறுக்கப்பட்ட கோழி அல்லது பன்னீர் அல்லது மீன் சாலட் இதில் ஏதாவது ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.
2. 100 கிராம் காய்கறிகளுடன் 100 கிராம் சிக்கன் அல்லது பன்னீர் எடுத்துக் கொள்ளலாம்.
3. பெரிய கப் தக்காளி சூப் செய்து குடிக்கலாம்.
4. ஒரு கப் கெமோமில் டீ மற்றும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிட வேண்டும். இந்த உணவு இரவில் பசியைத் தூண்டாமல் பாதுகாத்துக் கொள்ளும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. இனிப்பு பானங்கள், கேக்குகள், குக்கீகள், ஐஸ்கிரீம்கள் போன்ற கடைகளில் கிடைக்கும் உணவுகள்.
2. அதிகளவிலான கோதுமை, அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள்
3. சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்