தூங்குவதற்கு முன் இதை குடியுங்கள்! மேல் வயிறு சட்டென குறைந்துவிடும்
இன்று பலரும் போராடுவது உடல் எடையை குறைக்கத்தான், இதற்காக கடினமான உடற்பயிற்சிகள், டயட்டுகளை பின்பற்றி வருகின்றனர்.
ஆனால் உணவுகளிலும் முக்கியமான கவனத்தை கொள்ள வேண்டும், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மட்டுமே ஆரோக்கியத்தை தீர்மானிக்கும்.
அந்தவகையில் உடல் எடையை குறைக்க முடிவு செய்து விட்டால் கொழுப்புகளை கரைக்கும் பானங்களை எடுத்துக் கொள்வது அவசியம்.
இரவு உணவை தூங்குவதற்கு 2 மணிநேரத்துக்கு முன்னதாக எடுக்கவும், இதுதவிர இரவில் என்ன சாப்பிடலாம் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தய டீ
சின்னச்சிறு வெந்தயத்தில் ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.
இரவு உறக்கத்திற்கு முன்னர் வெந்தயத்தில் டீ போட்டு குடித்தால் செரிமானம் சீராவதுடன் கொழுப்பு எரிக்கப்படும்.
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.
இந்த நீரை காலையில் வடிகட்டி, இரவில் சூடு செய்து குடித்து வந்தால் எடையில் மாற்றத்தை உணர்வீர்கள்.