உடல் எடையை தாறுமாறாக குறைக்க சிரமமா? வெறும் வயிற்றில் இந்த ஒரு ஜுஸ் போதும்
இன்று உலக மக்களில் பெரும்பாலான நபர்கள் உடல் எடை அதிகரித்து அதைக் குறைப்பதற்கு கடும் அவதிப்படுகின்றனர். இதற்காக டயட் மட்டுமின்றி உடற்பயிற்சி இவற்றையும் மேற்கொண்டு சிரமப்படுகின்றனர்.
உடல் எடையைக் குறைப்பதற்கு, புரோட்டீன் ஷேக்குகள், ஸ்மூதிகள், பழச்சாறுகள், தேநீர் போன்ற பானங்கள் உதவுவதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு பல பழங்களை எடுத்துக்கொண்டாலும், எலுமிச்சை மற்றும் சியா விதைகள் உடல் எடையைக் குறைக்க அதிகமாக உதவி செய்கின்றது. இவற்றினைக் கொண்டு பானம் எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
சியா விதைகள் - 2 ஸ்பூன்
எலுமிச்சையின் சாறு - அரை பழம்
சூடான தண்ணீர் - ஒரு கிளாஸ்
தேன் - ஒரு ஸ்பூன்
செய்முறை
சியா விதைகளை 10 நிமிடம் தண்ணீர் ஊற வைத்துவிட்டு, அதனை ஒரு டம்ளரில் போட்டுக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரை எலுமிச்சையை சாறு பிழிந்து சேர்த்துக்கொண்டு, அதனுடன் சூடான தண்ணீரையும், ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்து கலந்து குடிக்கவும்.
இந்த பானத்தினை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால், பலனை கண்கூடாக அவதானிக்கலாம்.
வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கும் எலுமிச்சையினால் அதிக கலோரிகள் அளிக்கப்படுவதுடன், இதில் இருக்கும் வைட்டமின் சி, கொழுப்பு செல்களில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சியா விதைகள் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இவை அதிகமான நேரம் வயிறு நிரம்பிய ஏற்படுத்தும்.