உங்கள் உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ சிறந்ததா? பலரும் அறியாத உண்மை
பொதுவாக உடல் எடையை குறைக்க மக்கள் பின்பற்றும் ஆரோக்கிய பாண வகைகளில் கிரீன் டீ மற்றும் பிளாக் காபி ஆகியவையும் உள்ளன. இவை இரண்டும் மிகச்சிறந்த பானங்களாக கருதப்படுகின்றன.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு, பிளாக் காபீ மற்றும் கிரீன் டீ ஆகிய இரண்டு பானங்களுமே பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் கிரீன் டீ மற்றும் பிளாக் டீ என இரண்டிலுமே குறைவான கலோரிகளும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
பிளாக் காபியை விட கிரீன் டீ தான் அதிக நன்மை அளிக்கின்றது என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதில் ஆண்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன.
இருப்பினும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவருக்கு இதில் எது சிறந்தது என்ற சந்தேகம் காணப்படும். அந்தவகையில் இரண்டில் எந்த பானம் உடல் எடையை குறைக்க அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளவோம்.
கிரீன் டீ
கிரீன் டீயில் காஃபின் மற்றும் கேடசின் எனப்படும் ஒரு வகை ஃபிளாவனாய்டு உள்ளது. கேடசின் உண்மையில் ஒரு வகை ஆண்டிஆக்சிடெண்ட் ஆகும். கிரீன் டீ பாதுகாப்பான பானமாகக் கருதப்படுகிறது.
ஆனால் தினமும் 2 முதல் 3 கோப்பைகளுக்கு மேல் அருந்தக்கூடாது. கிரீன் டீ பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது.
ஒரு நாளில் காஃபின் அதிகமாக உட்கொள்வது தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது, இதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
பிளாக் காபி
பெரும்பாலான மக்கள் விரும்பும் மற்றொரு பிரபலமான பானம் காபி. குறிப்பாக மக்கள் எடை குறைக்க முயற்சிக்கும்போது, பிளாக் காபியையும் அதிகம் அருந்துகிறார்கள்.
பிளாக் காபி பாரம்பரிய காபியின் ஆரோக்கியமான பதிப்பாகும். ஏனெனில் இது கிரீம் மற்றும் சர்க்கரை இல்லாமல் அருந்தப்படுகின்றது.
பிளாக் காபி பொதுவாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களின் தேர்வாக இருக்கிறது. இதையும் அதிகப்படியாக உட்கொண்டால் அது சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குறிப்பு: கிரீன் டீ அல்லது பிளாக் காபியை குடித்தால் மட்டும் நீங்கள் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைக்க உங்கள் வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.