உடல் எடை குறித்து அதிகமாக கவலைப்படுகிறீர்களா? இந்த ஒரு பொருள் போதும்
இன்று பெரும்பாலான நபர்கள் உடல் எடையினால் பெரிதும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். மேலும் உடல்எடையினை குறைக்க பல வழிகளில் முயற்சிகளையும், டயட்டிலும் காணப்படுகின்றனர்.
ஆனால் எடை அதிகரிப்பது என்பது ஒரு நோயல்ல. ஆனால் இவை அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இதய தமனி நோய் இவற்றினை கொண்டு வரும். இதனாலே தான் பலரும் உடல் எடையை குறித்து அதிகமாக கவலை படுகின்றனர்.
உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்?
உலர் திராட்சையில் அதிக சத்துக்கள் காணப்படுவதால், அதனை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால், உடல் எடையை பெரிதும் குறைவதுடன், பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து உட்கொள்ளத் தொடங்கினால், உடல் நச்சுகளை சிறப்பாக வெளியேற்ற உதவுகிறது.
மேலும் இவை வயிற்றுக்கு நல்லது, செரிமான பிரச்சனையை நீக்குவதுடன், நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொள்ளலாம்.
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் திராட்சைப்பழத்தில் காணப்படுகின்றன, இதன் காரணமாக நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தொடங்குகிறது.