தொங்கி கொண்டிருக்கும் தொப்பையை மின்னல் வேகத்தில் குறைக்க சில டிப்ஸ்
பொதுவாக அதிக எடையுள்ளவர்கள் தங்களின் எடையை குறைத்து சிலிம்மாக மாற வேண்டும் என பல வழிகளில் முயற்சி செய்து வருவார்கள்.
டயட்டை வைத்து உடல் எடையை குறைப்பதனை விட சிலவகை பானங்களை வைத்து நாம் எடை குறைக்கலாம்.
இந்த பானங்கள் உங்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் இந்த பிரச்சினை பெண்களுக்கு தான் அதிகம் இருக்கின்றது. திருமணத்திற்கு பின்னர் ஒரு குழந்தை பிறந்த பின்னர் தங்களின் எடை தாறுமாறாக போட்டு விடும்.
டயட் பின்பற்றினால் குழந்தையின் உடலுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடும் என்ற பயத்தில் சில ஏதுவும் செய்யாமல் அதே எடையில் இருப்பார்கள்.
ஆனால் இப்படியொரு நிலையில் இருப்பவர்களுக்கு எந்த விதமான பாதகமான விளைவுகளும் அல்லாமல் நாம் எடையை குறைக்கலாம்.
அந்த வகையில், ஆரோக்கியமான முறையில் எப்படி பானங்களை வைத்து எவ்வாறு எடையை குறைப்பது என்பது தொடர்பில் பார்க்கலாம்.
1. அன்னாசி பழச்சாறு
அன்னாசி பழச்சாற்றில் இயல்பாகவே புரோமலைன் என்ற பொருள் அதிகமாக காணப்படுகிறது.
இந்த பதார்த்தம் செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் எம்மை பாதுகாத்து சிறந்த ஒரு செரிமானத்திற்கு உதவியாக இருக்கின்றது.
மேலும் அதிகப்படியான பசியும் ஏற்படாமல் நம்மை காத்துக் கொள்கின்றது.
தேவையான பொருட்கள்
அன்னாசிப் பழம் - 11/2 கப்
லெமன் ஜூஸ் - 21/2 டேபிள் ஸ்பூன்
இலவங்கப்பட்டை தூள் - 1 டீஸ்பூன்
கருப்பு உப்பு ஜீஸ்
தயாரிப்பு முறை
மேற்குறிப்பிட்ட பழங்கள் மற்றும் பொருட்கள் என அனைத்தையும் ஒரு மிக்ஸி சாரில் போட்டு அரைக்கவும்.
பின்னர் ஒரு டம்ளர் ஊற்றி தினமும் குடித்து வந்தால் உடல் எடை தானாக இறங்கும்.
மேலும் இதனால் ஏதாவது பக்க விளைவுகளும் ஏற்படாது.
2. லெமன் ஜூஸ்
லெமனில் ஆன்டி டயாபெட்டிக் அதிகம் இருக்கின்றது.
இது இரத்த நாளங்களுக்கு எதிர்ப்பு தன்மையை தருகிறது. எலும்பு பலவீனம் மற்றும் பற்கள் முறையற்று வளர்வதை கட்டுபடுத்துகிறது.
மேலும் கெட்ட கொழுப்புகள் வயிற்று பகுதியில் தங்குவதை தடுக்கிறது.
தேவையான பொருட்கள்
தண்ணீர் - 1/2 கிளாஸ்
லெமன் - 1
பேஷன் பழம் -1
ஸ்வீட்டனர் (விரும்பினால்)
செய்முறை
மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களை ஒன்றாக கலந்து. தினமும் மாலையில் குடித்து வந்தால் சில வாரங்களிலே எடை குறைந்து விடும்.