நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் அன்னாசிப் பழம் எவ்வளவு சாப்பிடலாம்?
பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை தான் என்றாலும், நீரிழிவு நோய் என்று வரும் போது, நீரிழிவு நோயாளிகளுக்கு அனைத்துப் பழங்களும் ஆரோக்கியமானதாக கருதப்படுவதில்லை.
ஏனெனில், சில பழங்கள் உங்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்யலாம்.
அதோடு, நீரிழிவு தொடர்பான பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
ஆரோக்கியமான பல வகைகளில் ஒன்றான அன்னாசிப் பழத்துக்கும்.
நீரிழிவு நோய்க்கும் இடையேயான தொடர்பு பற்றி பல விவாதங்கள் உள்ளன. அன்னாசி பழம் நீரிழிவு நோயாளிகளுக்குப் பல வழிகளில் நன்மை பயக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.
பலர் நீரிழிவு நோயாளிகள் அன்னாசி பழத்தை உணவில் சேர்க்கக்கூடாது என்று கூறுகின்றனர்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி கலோரி 1800 கலோரிகளாக இருந்தால், அவர்கள் கார்போஹைட்ரேட்டிலிருந்து சுமார் 900 கலோரிகளைப் பெற வேண்டும்.
- அதாவது பாதி அளவு கலோரிகளை கார்ப்ஸில் இருந்து பெற வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவை ஒரு நாளைக்கு நான்கு வேளையாக பிரித்து ஒவ்வொரு முறையும் சுமார் 225 கார்போ ஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 100 கிராம் அன்னாசிப் பழத்தில் 13 கிராம் கார்போ ஹைட்ரேட்டுகள் உள்ளதால், உணவின் போது சிறு துண்டு அன்னாசிப் பழத்தை உட்கொள்ளலாம்.
- அதேவேளையில், ஒரே வேளையில் முழுமையான அன்னாசிப் பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- ஏனென்றால், அன்னாசிப் பழத்தில் மிதமான கார்போ ஹைட்ரேட்டுகள் இருந்தாலும், அவற்றை ஒரே நேரத்தில் உட்கொண்டால் அதில் உள்ள உயர் கிளைசெமிக் குறியீடு குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
- அன்னாசிப் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இருப்பினும் கொய்யா, நாவல் பழம் போன்ற மற்ற நீரிழிவுக்கு சிறந்த பழங்களில் உள்ள அளவு நார்ச் சத்து அன்னாசியில் இல்லை.
- அன்னாசிப் பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஜிஐ எனப்படும் கிளைசெமிக் குறியீடு அதிகமாக இருப்பதால், இதனை அதிகமாக எடுத்துக் கொள்வதால் நன்மைகளுக்கு பதில், பாதகமான விளைவுகள் ஏற்படும் என்பதால் அன்னாசியை அளவோடு உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உணவில் அன்னாசிப் பழத்தை எப்படிச் சேர்ப்பது ?
பழுத்த அன்னாசிப் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட அன்னாசி அல்லது அன்னாசி சிரப் போன்றவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
அன்னாசிப் பழத்தை ஜூஸ் செய்வதை தவிர்த்து, அப்படியே பழமாக சாப்பிடுங்கள். இல்லையெனில், அன்னாசியுடன் தானியங்கள், இறைச்சிகள் அல்லது நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் இணைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஓட்ஸ் மற்றும் பிரவுன் ரைஸ் போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளுடன் அன்னாசிப் பழத்தை இணைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல், மற்ற குறைந்த ஜிஐ கொண்ட பழங்களான ஆப்பிள், கொய்யா மற்றும் பெர்ரி போன்ற பழங்களுடன் இணைத்தும் அன்னாசி பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அடிக்கடி சாப்பிடக் கூடாது
அன்னாசிப் பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழம் தான் என்றாலும், நீரிழிவு நோயாளிகள் அதனை அடிக்கடி சாப்பிடுவதை நிறுத்தவும்.
அல்லது உட்கொள்ளலைக் குறைக்கவும் முயற்சிக்க வேண்டும். உங்களின் மருத்துவ நிபுணரை அணுகி, எவ்வளவு அன்னாசிப் பழத்தை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும், சேர்ப்பதற்கான சிறந்த வழி என்ன என்று கேட்டு அறிந்து அதன்படி உண்பது மிகவும் நல்லது.