உடல் எடையை அசுர வேகத்தில் குறைக்க உதவும் பானம்! 5 நிமிடத்தில் உடனே தயாரிக்கலாம்
அனைவருமே உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றோம்.
பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நாம் அவசியம் பின்பற்ற வேண்டியது சரியான உணவு பழக்கத்தை தான்.
உணவு முறையை பொறுத்த வரையில் பல வித உணவு முறை உடல் எடையை குறைக்க உதவியாக உள்ளது.
இன்று நாம் எடையை குறைக்கும் பட்டர் காபி எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
காபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் தடுக்கும்.
பட்டர் காபி குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது. எனவே நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் இருந்தால் பட்டர் காபியை எடுத்து கொள்ளுங்கள்.
பட்டர் காபி
தேவையான பொருட்கள்
- தண்ணீர் - 1 கப்
- பால் - 1 கப்
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்
- காபி தூள் - 2 டீஸ்பூன்
-
உப்பு - சிறிதளவு
செய்முறை
முதலில் பாத்திரத்தினை அடுப்பில் வைத்து தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
கொதிக்க வைத்த தண்ணீரில் காபித்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் அதில் நன்றாக கொதிக்கும் பாலை சேர்க்கவும்.
அடுத்து உப்பு, வெண்ணெய் சேர்த்து மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் கலக்க வேண்டும்.
காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் வரும் போது எடுத்து கப்பில் ஊற்றி பருகவும்.
5 நிமிடங்களில் ஆரோக்கியமான பட்டர் காபி தயார் செய்து விடலாம்.