உடல் எடை வேகமாக குறைய வேண்டுமா? இந்த 2 பொருள் கலந்த தண்ணீர் போதும்
இயற்கையாக உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்றால் இந்த மேஜிக்கான இயந்கை பானத்தை ஒரு முறை குடித்து பாருங்கள்.

உடல் எடை
சமையலறையில் சில மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் பயன்படுவதில்லை. அந்த வகையில் மஞ்சள் மற்றும் சீரகம் போன்ற மசாலாப் பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகின்றது.
மஞ்சள் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் ஒரு பொருள். அதே போல தான் சீரகமும். ஆனால் இது உடல் எடை குறைக்கவும் பயன்படுகின்றது.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சள் மற்றும் சீரகத் தண்ணீரை குடிக்க வேண்டும். இதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

எதை குடிக்க வேண்டும?
மஞ்சள்-சீரகத் தண்ணீர்
இதை தயாரிக்க முதலில், ஒரு பாத்திரத்தில் ஒரு குவளை தண்ணீர் ஊற்றவும். இந்தத் தண்ணீரில் அரை தேக்கரண்டி சீரகத்தைச் சேர்க்கவும். அடுத்து, கால் தேக்கரண்டி மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.
பின்னர் அடுப்பை பற்றவைத்து, தண்ணீரை கொதிக்க வைக்கவும். இது கொதித்தவுடன், அடுப்பை அணைத்து, மஞ்சள்-சீரகத் தண்ணீரை ஆறவிட்டு, பின்னர் குடிக்க வேண்டும்.

பயன்
மஞ்சளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல வேதிப்பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. .இவை கொழுப்பைக் கரைப்பதில் பங்களிக்கும். அதே போல சீரக விதைகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தவும் உதவும்.
இதனால்தான், மஞ்சள் மற்றும் சீரக நீரைத் தவறாமல் குடிப்பது உங்கள் எடை குறைப்புப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும். இதை அதிகாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறந்த பலனை பெறலாம்.

ஆரோக்கியத்திற்கு ஒரு வரம்
மஞ்சள் மற்றும் சீரக நீர் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். இது அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.
ஊட்டச்சத்து நிறைந்த இந்த பானத்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அருந்தலாம். கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, மஞ்சள் மற்றும் சீரக நீர் உதவும் என்பதால் இதை அன்றாட உணவு திட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |