உடல் எடையைக் குறைக்க சிரமப்படுகிறீர்களா? உங்க டயட்டிலிருந்து இந்த 5 உணவை உடனே தூக்கிடுங்க
ஆரோக்கியமான உடல்நலத்துக்கு சரியான உணவுகளை சாப்பிடுவது அவசியம். ஊட்டச்சத்துள்ள உணவுடன் தேவையான உடற்பயிற்சியும் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைக்கவும் இந்த 5 உணவுகளை உங்களது டயட்டில் இருந்து நீக்கிவிடுங்கள்.
புரொடீன் பார்கள்: புரொட்டீன் பார்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட செயற்கை பொருட்களால் தயாராகிறது. இது உடலில் உள்ள கலோரியின் அளவை அதிகரிக்கச் செய்யும். கலோரியை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து டயர்ட் ஆகிவிடுவீர்கள்.
சூப் பாக்கெட்ஸ்: பாக்கெட்களில் கிடைக்கும் சூப்களை தயாரிப்பது எளிது. அதில் சத்துக்கள் இருந்தாலும், அது ஆரோக்கியமானதல்ல. ஏற்கனவே பேக் செய்யப்பட்ட இந்த சூப் கலைவையில் கூடுதலாக உப்பும், கொழுப்பும் இருக்காது.
புரவுன் ப்ரெட்: கடைகளில் விற்கப்படும் பிரவும் ப்ரெட்டில் சர்க்கரை இல்லை என்பார்கள். ஆனால், புரவுன் கலராக மாற்ற அதில் சர்க்கரை சேர்க்கப்படும். இதில் உள்ள மாவு மற்றும் ஈஸ்ட் உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்துவிடும்.
பழச்சாறு: பழச்சாறில் சர்க்கரை இயற்கையாகவே அதிகம் இருக்கும், ஃபைபர் இருக்காது. ஆகையால் முழு பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் ஆரோக்கியமும் இருக்கும், எளிதில் ஜீரனமாகிவிடும்.
பேஸ்ட்ரீஸ்: சர்க்கரை அதிகம் நிறைந்த இதுபோன்ற கேக் வகைகளில் மாவுச்சத்தும், கொழுப்பும் உள்ளது. இதில் கலோரி அதிகமாகவும், ஆரோக்கியம் குறைவாகவும் இருக்கும் என்பதால் இதை கட்டாயம் தவிக்க வேண்டும்.