எடையை டபுள் மடங்கு வேகமாக குறைக்க இதை தினமும் வாயில் போட்டு மெல்லுங்க!
கிராம்பு எடை இழப்பை விரைவுபடுத்துகின்றதாம்.
கிராம்புவை தேநீர் மற்றும் சமையலில் நீங்கள் பயன்படுத்தலாம்.
எடை குறைப்பதில் கிராம்புகளின் நன்மைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
கிராம்புகளின் சத்துக்கள்
மாங்கனீசு ,வைட்டமின் கே, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் மற்றும் குறைந்த அளவு புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை கிராம்புகள் கொண்டுள்ளது.
கிராம்பு எடையை குறைக்க எப்படி உதவுகிறது?
கிராம்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
வளர்சிதை மாற்றம் நேரடியாக எடை இழப்புடன் தொடர்புடையது மற்றும் குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதற்கான அறிகுறி என்பது அனைவரும் அறிந்த உண்மை.
கிராம்பு எளிதில் கிடைக்கும் மசாலாப் பொருள். இதில் மருத்துவ குணங்கள் அதிகளவு நிறைந்துள்ளது.
அதனால் தான், பண்டைய காலங்களில் இருந்து கிராம்பு உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆதலால், ஒருவர் தினமும் சில கிராம்புகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவற்றை அப்படியே கூட வாயில் போட்டு உண்ணலாம்.