எடையை குறைக்க பட்டினி கிடப்பவரா நீங்கள்? உயிருக்கு ஆபத்தாம்
உடல் எடையைக் குறைப்பதற்கு பட்டினியாக இருந்தால் குறைக்க முடியுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எடையைக் குறைக்க பட்டினியாக இருக்கணுமா?
இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடையைக் குறைக்க பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் சில தருணங்களில் பட்டினியாக இருக்கவும் செய்கின்றனர்.
உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் மாறிவரும் வாழ்க்கை நிலை, துரித உணவு கலாச்சாரம் என்பவையே. இவ்வாறு உடல்எடையினால் அவதிப்படுகின்றவர்கள் பல டயட் முறையையும் பின்பற்றி வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் Intermittent Fasting என்ற டயட் ட்ரெண்டாகி வருகின்றது. அதாவது ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 16 மணி நேரத்தை சாப்பிடாமல் பட்டினியாக கிடந்துவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டுமே தினசரி சாப்பாடை சாப்பிடுவது.
image: hexahealth
இவ்வாறு டயட் மேற்கொள்வதால் உடல் எடை குறைவதாக அநேகர் கூறிவருவதால், பலரும் இந்த டயட்டை பின்பற்றி வருவதாக கூறப்படும் நிலையில், இது குறித்து ஆய்வு செய்துள்ள தி அமெரிக்கன் இதய கூட்டடைப்பு அதிர்ச்சியான அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி இதுபோன்ற Intermittent Fasting முறையில் டயட் மேற்கொள்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 91% அதிகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது குறித்த டயட்டை மேற்கொள்ளும் நபர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |