இந்த வாரம் இந்த ராசியினருக்கு அதிஷ்டமாம்? உங்க ராசி இருக்கானு பாருங்க
ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
அந்த அமைப்பே அவரது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் அதாவது 2024 பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சில ராசிகளுக்கு அதிஸ்டமான வாரமாக இருக்கப் போகிறது.
எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. கன்னி
கன்னி ராசி நபர்களுக்கு இந்த வாரம் அவர்கள் செய்யும் வேலையில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். எதை நீங்கள் எதிர் பார்கிறீர்களோ அதற்குரிய பலனை நீங்கள் பெறுவீர்கள்.
நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ வலிமையுடன் இருப்பீர்கள். நீங்கள் கையில் எடுத்த வேலை வெற்றியாக முடியும்.
2. தனுசு
எதிலும் நிறைய லாபம் கிடைக்கும். எல்லாவற்றிலும் பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் வேண்டும் என்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்தால் அதற்கான முடிவை காண்பீர்கள். மனதளவில் நல்ல ஒரு இன்பத்துடன் இருப்பீர்கள். வார இறுதியில் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.
3. கும்பம்
நீங்கள் இந்த வாரத்தில் பெற்றோரின் ஆதரவை பெறுவீர்கள். திருமணமாகதவர்களுக்கு வாழ்க்கை துணை கிடைக்கும். நீங்கள் பணப்புழக்கத்தில் கவனமாக இருந்தால் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றத்தை காணலாம்.
மிகப்பெரிய பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |