Weekly Rasipalan: மிக கவனமாக இந்த வாரத்தை கடக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள்- வார ராசிப்பலன்
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது பணக்கஷ்டத்தில் இருந்து கூடிய விரைவில் பணம், வசதி, சொந்தங்களுடன் இணையப் போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அதிர்ஷ்டம் பெறும் ராசியினர்
1. கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் பணிபுரியும் இடத்தில் பதிவு உயர்வு கிடைக்கும். அத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளின் அனைத்து வேலைகளும் எதிர்பார்த்தவாறு முடிவடையும். அதே சமயம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இந்த வாரம் முடிவடையும். இனிமையாக வீட்டில் நடக்கவிருக்கும் சுப காரியங்கள் எந்தவித தடையும் இல்லாமல் நடக்கும். வாழ்க்கைத் துணையுடன் உங்களின் இனிமையான நேரத்தை செலவிடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
2. துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் அற்புதமாக கழிப்பார்கள். எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் அன்புக்குரியவர்கள் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் உடல்நிலை மேம்படும். பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த வாரம் கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி இருக்கும். கடின உழைப்பின் பலனை இந்த வாரம் பெறுவீர்கள்.
கஷ்டம் அனுபவிக்கும் ராசிகள்
1. மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் அலட்சியமாக இருப்பார்கள். இவர்களில் அதிக செலவு செய்ய வாய்ப்பு இருக்கிறது. பணப்பிரச்சினை வரும் போது சேமிப்பு இருப்பவர்கள் தப்பிக் கொள்வார்கள். கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
2. ரிஷபம்
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சவாலாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இந்த வாரத்தை கடந்து விட்டால் அடுத்த வாரம் அதிர்ஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |