இந்த கிழமையில் இதை செய்தால் கையில் பணம் அதிகம் சேருமாம்! லட்சாதிபதியாகலாம்...ஒரு முறை செய்யுங்க
புதன் கிழமை விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்நாளில் விநாயகரை முறையாக வழிபடுவதன் மூலம், அவரின் சிறப்பான அருளால் மகிழ்ச்சியும் செழிப்பும் வந்து சேரும்.
இது தவிர ஒருவருக்கு விநாயகரின் அருள் கிடைத்தால், அவருக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெரும்.

இப்போது விநாயகருக்கு உரிய புதன்கிழமைகளில் எந்த விஷயங்களை செய்தால் விநாயகரை மகிழ்வித்து அவரது அருளைப் பெறலாம் என்பதைக் காண்போம்.

அருகம்புல்லை
விநாயகரை மகிழ்விக்க வேண்டுமானால் அவருக்கு பிடித்த அருகம்புல்லை வாங்கி கொடுங்கள். விநாயகருக்கு அருகம்புல்லை வழங்கி அர்ச்சனை செய்யும் பக்தர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
எனவே தினமும் விநாயகருக்கு அருகம்புல்லை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.
குங்குமத்தை பூசுங்கள்
விநாயகருக்கு குங்குமத்தை பூசினால், அவர் மகிழ்ந்து, நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் வழங்குவார். விநாயகருக்கு குங்குமத்தை பூசிய பின்னர், நீங்களும் உங்கள் நெற்றியில் குங்குமத்தை பூசிக் கொள்ளுங்கள்.

பிரசாதம்
விநாயகருக்கு லட்டு மற்றும் மோதகம் என்றால் ரொம்ப பிடிக்கும். எனவே புதன்கிழமைகளில் இவற்றில் ஒன்றை விநாயகருக்கு படைத்து வணங்கினால், அவர் மகிழ்ச்சியடைந்து, உங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி செல்வம் பெருக வழிவகை செய்வார்.
அட்சதை பயன்படுத்தவும்
நீங்கள் விநாயகரை விரைவில் மகிழ்ச்சியடைய செய்ய வேண்டுமானால், அவரை வழிபடும் போது பூஜையில் அட்சதையை பயன்படுத்துங்கள்.
அட்சதை என்பது உடைக்கப்படாத புனித அரிசி. அட்சதை இல்லாமல் கணபதி வழிபாடு முழுமையடையாது என்பது நம்பிக்கை. எனவே புதன்கிழமைகளில் விநாயகருக்கு பூஜை செய்யும் போது தவறாமல் அட்சதையைப் பயன்படுத்துங்கள்.
