மணப்பெண் எனக்கே சொந்தம்! திருமணத்தில் புகுந்த இளைஞரால் அதிர்ச்சியில் சிலையான மாப்பிள்ளை
திருமணம் ஒன்றில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் தனது காதலி தனக்கு தான் சொந்தம் என நடுவில் புகுந்து திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உத்தரபிரதேச - மாநிலம் கோரக்பூரில் நடந்த திருமணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அங்கு மணமகன் மற்றும் மணமகளின் திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அந்த நேரத்தில் அதிரடியாக நுழைந்த ஒருவர், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
இந்த காட்சியை பார்த்த மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்தவர்களும் செய்வதறியாது திகைத்தனர்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியதை காணொளியில் காணலாம்.
பின்னர் இந்த வழக்கு கோரக்பூரின் ஹர்பூர் புத்தத் காவல் நிலையப் பகுதியில் பதிவானது. திருமணத்தின் போது, மணமக்கள் மேடையில் மாலை மாற்றிக் கொள்ள செய்ய தயாராக இருந்தபோது.
இவள் என் காதலி - திருமணத்தில் குட்டையை குழப்பி காதலன்.#marriage #love #viral_video #uttar_pradesh #Gorakhpur pic.twitter.com/5P588pKgwE
— Lankasri FM (@lankasri_fm) December 7, 2021
ஏற்பட்ட இந்த சம்பவத்தை அடுத்து, உடனடியாக மணக்கள் தரப்பு போலீசில் புகார் அளித்தது.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை புரிந்து கொண்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஹர்பூர் புதாத் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் இந்த பெண்ணை காதலித்துள்ளான். ஆனால், அவன் வெளியூர் சென்றிருந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
இதையறிந்த காதலன் கிராமத்திற்கு திரும்பி வந்து திருமணத்தின் போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளான்.