சாப்பாட்டிற்காக திருமணத்தில் நடந்த கலவரம்! சூறையாடப்பட்ட மண்டபம்; வைரல் வீடியோ!
திருமணம் சார்ந்த காட்சிகள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாவது உண்டு. அதிலும் திருமணம் சார்ந்த சண்டைகள் அதிகம். பந்தக்கால் நடுவது முதல் பந்தி பரிமாறுவது வரை திருமண சடங்குகளில் நடக்காத சண்டைகளே இருக்காது.
எந்த சண்டையை வேண்டுமானாலும் பேசி தீர்த்து விடலாம். ஆனால் சாப்பாடு விஷயத்தில் பிரச்னை வந்தால் அவ்வளவுதான் அந்த கல்யாண வீடே அதகளமாகி விடும்.
அந்த வகையில், கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஹரிப்பாடு அருகே முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்தில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதில், மணமகள் முட்டம் பகுதியையும், மணமகன் திருக்குன்றப்புழா பகுதியையும் சேர்ந்தவர்கள். மாப்பிள்ளையின் நெருங்கிய தோழர்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.
இதில், திருமணத்தை பார்த்து முடித்துவிட்டு பந்திக்கு சென்று மாப்பிள்ளையின் நண்பர்கள் சாப்பிட சென்றிருக்கிறார்கள். சாப்பாட்டிற்கு கூடுதலாக அப்பளம் வேண்டும் என நண்பர்கள் குழுவில் இருந்த ஒருவர் கேட்டிருக்கிறார்.
ஆனால் அவர் கேட்ட அப்பளம் கொடுக்காமல் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த சமயம் பார்த்து வாய் வார்த்தையாக இருந்த தகராறு கை கலப்பாக உருமாறியிருக்கிறது.
இதனால் மண்டப ஊழியர்கள், மாப்பிள்ளையின் நண்பர்கள் இடையேயான சண்டை கோஷ்டி மோதலாகியிருக்கிறது.
இதன்பின், அப்பளத்துக்காக நடந்த சண்டை குறித்து மண்டப உரிமையாளர் முரளிதரன் அளித்த புகாரின் பேரில் ஆலப்புழா போலீசார் திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் விலக்கியதோடு, தகராறில் ஈடுபட்டதாக 15 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.
In the great 100% literate state of Kerala, a fist fight broke out at a wedding after friends of the bridegroom demanded papad during the feast. This triggered a verbal spat and ended up in an ugly brawl. No wonder Mallus belo papad. ? pic.twitter.com/HgkEUYMwfy
— Rakesh Krishnan Simha (@ByRakeshSimha) August 29, 2022