மருமகனை அழைத்து சென்று மாமியார் செய்த திருமணம்.. போலீசாருக்கே விடுத்த எச்சரிக்கை!
உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள முண்ட்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது பெண் பாப்லி.
இவருக்கும், அவரது மருமகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து 10 மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனிடையே, அவர்கள் இருவரும் ஊருக்கு திரும்பினார்கள். அப்போது தாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டு பதிவு செய்ததாகவும் ஒன்றாக வாழ விரும்புவதாகவும் கூறினார்கள்.
மேலும், தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் உறவினர்களிடம் கூறினார்கள். இதற்கு அப்பெண்ணின் கணவரும், மகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. மேலும், கள்ளக்காதல் ஜோடிக்கு கிராமத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடமும், இருவரும், தங்களை பிரிக்க முயற்சி செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.
இதனைத்தொடர்ந்து, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தியதால் மாமியார், மருமகனை போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.