தரையில் விழுந்து சிரித்த மணமகள்: உண்மையான காரணம் அம்பலமானது
மணமேடையில் மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படகாரரை மணமகன் அடிப்பது போன்ற வீடியோ வைரலாகி வந்தது. பேஸ்புக், டுவிட்டர் என சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக, தற்போது உண்மையான காரணம் அம்பலமாகியுள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் மணமகள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நடிகை அனிகிரிதி சவ்ஹான் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் 'Darling Pyaar Jhukta Nahi' என்ற திரைப்படத்தில் அனிகிரிதி நடித்து வரும் நிலையில், அதில் இடம்பெற்ற காட்சி ஒன்று தான் இதுவாகும். இதை அந்த நடிகையே உறுதிப்படுத்திய நிலையில், தனக்கு திருமணமாகவில்லை என்றும், திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி Renuka Mohan என்பவரால் பகிரப்பட்டு வைரலானதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பின் போதும், படக்குழுவினருடனும் எடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களையும் அனிகிரிதி பகிர்ந்துள்ளார்.