திருமணத்தில் ஜோடிகள் போட்ட ஆட்டம்: நொடியில் பதற வைத்த தருணம்! வேற லெவல் காட்சி
திருமண விழா ஒன்றில் மணமக்கள் ஆடிய துடிப்பான நடனக்காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரைவலாகி வருகின்றது.
வாழ்வில் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் திருமணத்தினை தற்போது மணமக்கள் பெரும் கச்சேரியாகவே நடத்தி வருகின்றனர்.
திருமணத்தில் மணமக்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் சர்ரைஸ் கொடுப்பது தற்போது வழக்கமான நிலையில், இங்கு திருமண ஜோடிகள் நடத்திய அட்டகாசமான நடனக்காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த காட்சியில் பின்னணியில் 'இன் த கெட்டோ' என்ற வைரல் பாடல் ஒலிக்கையில், மணமகளும், மணமகனும் முழு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் ஆடுவதை அவதானித்த உறவினர்களும் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த உற்சாகத்தின் உச்சக்கட்டத்தில் மணமகன் மணமகளை தூக்கிய பொழுது சில நொடியில், தனது சமன்பாட்டினை இழந்து விடுகின்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக நொடிப்பொழுதில் இயல்பு நிலைக்கு வந்த மணமக்கள் தங்களது பாணியில் மீண்டும் நடனத்தினை தொடங்கியுள்ளனர்.