இந்த திகதியிலா திருமணம் முடிச்சீங்க...உங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்!
ஒருவரின் வாழ்க்கையில் திருமணம் என்பதுதான் திருப்புமுனையாக அமையும். அந்த திருமணத்தை நல்ல நாள், நேரம் பார்த்துதான் செய்து வைப்பார்கள்.
சில திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். ஒரு சில திருமணங்கள் விவாகரத்தில் போய் முடியும். ஏன் அவ்வாறு நடக்கின்றது?
ஒருவேளை மனப்பொருத்தம் ஒழுங்காக இல்லாமல் இருக்கலாம். இன்னும் சில கால நேரங்கள் சரியில்லாமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் நாம் திருமணம் செய்யும் திகதி என்பது மிகவும் முக்கியமானது.
ஏனென்றால் திருமணத் திகதி என்பது அந்த தம்பதிகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. சரி இனி எந்தெந்த திகதிகள் என்னென்ன நன்மைகளைக் கொண்டுவரும் எனப் பார்ப்போம்...
திகதி 01
இந்த திகதியில் திருமணம் செய்தால், அந்த ஜோடி மென்மையான, அன்பான ஜோடியாக இருப்பர். அதுமட்டுமல்ல தனது இணையை வாழ்நாள் முழுவதும் காதலிப்பார்கள். வேடிக்கை நிறைந்த ஒரு வாழ்க்கையாக இவர்களின் வாழ்க்கை அமையும். இவர்களின் திருமணம் அதிக காலம் நீடிக்கக்கூடியது.
திகதி 02
இந்த திகதியில் திருமணம் செய்துகொள்ளும் ஜோடியில் ஒருவர் உணர்ச்சி முதிர்ச்சி குறைவாக இருப்பார் எனினும் மற்றவரின் முதிர்ச்சி திருமண வாழ்வை வெற்றிகரமாக மாற்றக்கூடியது.
இந்த நாளில் செய்யப்படும் திருமணத்தில் யாரேனும் கண்ணீர் சிந்தக்கூடும். ஏனென்றால் இது உணர்வுகளினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு திருமண நாளாக இருக்கும்.
திகதி 03
காதலித்து திருமணம் செய்துகொள்பவர்கள் இந்த நாளை தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் இந்த நாளில் திருமணம் செய்தால் அது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கும்.
பல குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. இந்த திருமண வாழ்க்கையானது முதல் மூன்று ஆண்டுகளுக்குள் முடிவடைய வாய்ப்புள்ளது. அதிலிருந்து மீண்டுவிட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திகதி 04
இந்த திகதியின் சிறப்பு என்னவென்றால், நிரந்தரம் மற்றும் நம்பகத்தன்மையாகும். இந்த திகதியில் திருமணம் செய்துகொண்ட தம்பதி தனது இலக்குகளை அடைய ஒன்றாகவே முயற்சி செய்வார்கள். பொறுப்பு, கடமை பற்றி நன்றாக அறிந்தவர்களாக இருப்பார்கள்.
திகதி 05
இந்த திகதியை தேர்ந்தெடுப்பவர்கள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள். இந்த திருமண பந்தம் சலிப்பை எதிர்த்து போராடக் கூடியது. சுறுசுறுப்பாக இருப்பார்கள். வசிப்பிட மாற்றங்கள், பயணங்கள் நிறைந்த வாழ்க்கையாக அமையும்.
திகதி 06
தங்களது உறவை சோதனைகளிலிருந்து காப்பாற்ற கடுமையாக முயற்சிக்க வேண்டியிருக்கும். மென்மை, அமைதி, மகிழ்ச்சி என்பன இந்தத் திருமணத்தின் சிறப்பியல்புகளாகக் காணப்படுகிறது. காதல் இயற்கையானதாக இருப்பதே இந்த திருமணத்தின் பலம்.
'
திகதி 07
இந்த திகதியானது தவறான முடிவுகளைக் குறிக்கும். இது அதிர்ச்சிகளும் மாற்றங்களும் கொண்டதொரு திருமணமாக இருக்கும். கடைசி நொடியிலும் திட்டங்களை மாற்றுவதற்கு தயாராக இருக்கவேண்டும்.
திகதி 08
தம்பதிகள் வித்தியாசமான ரசனை கொண்டவர்களாக இருப்பர். ஒன்றாக தொழில் செய்வதில் வெற்றி காண்பார்கள். இருவருக்குள்ளும் சண்டைகள் ஏற்பட்டால் விரைவில் தீர்ந்துவிடும். இருவருக்கும் சந்திக்கும் தருணத்திலேயே ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்துவிடும்.
திகதி 09
இந்த நாளில் திருமணம் செய்யவேண்டுமானால், நிறைய தியாகங்கள் செய்யவேண்டியிருக்கும். வீட்டை விட்டு கூட வெளியேறலாம். ரகசியமான அமைதியான திருமணமாக இருக்கலாம்.