திருமணம் முடித்தவுடன் மணமக்கள் போன இடம்...! நாங்க இப்படியும் போட்டோஷூட் பண்ணுவோம்
பொதுவாகவே திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் தங்களது திருமணத்தில் வித விதமாக செய்ய வேண்டும் என்று பெரிய எதிர்பார்ப்பும் ஆசையும் இருக்கும்.
அவ்வாறு திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் திருமண ஜோடிகள் வித விதமாக தங்களுக்கு பிடித்த அழகான இடங்களில் வைத்து போட்டோஷூட் எடுத்துக் கொள்வார்கள்.
அவ்வாறு இந்தியாவில் ஒரு புது திருமண தம்பதிகள் திருமணம் முடித்த கையோடு போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டார்கள். அதுவும் மாத்தியோசித்து ஜிம்மில் வைத்து போட்டோஷூட் எடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
அவர்கள் எடுத்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் போட்டோசூட்
இந்தியாவில் மதுரையைச் சேர்ந்தவர் தான் சரவணபாண்டி. இவர் அப்பகுதியில் ஜிம் பயிற்சியாளராக வேலைப்பார்த்திருக்கிறார்.
அதே ஜிம்மில் அன்னலட்சுமி என்ற பெண் பெண்களுக்கான உடற்பயிற்சி பயிற்சியாளராக வேலைப்பார்த்திருக்கிறார்கள்.
நாளடைவில் இவர்கள் நண்பர்களாகி நட்பு காதலாக மாறி இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
திருமணம் முடிந்த உடன் போட்டோஷூட் எடுக்க வேண்டும் என கூறி இவர்களின் காதல் ஆரம்பமான இடத்திற்கு சென்று வித விதமாக உடற்பயிற்சி செய்வது போல போட்டோஷூட் நடத்தியிருக்கிறார்கள்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றது.