ஒற்றுமைக்கு உதாரணமாக வாழும் முசுடு... மெய்சிலிர்க்க வைக்கும் எறும்பு இனம்!
நபரொருவர் முசுடு என்று அழைக்கப்படும் எறும்பு வகை குறித்த பல்வேறு சுவாரஸ்யமாக விடயங்களையும் விரிவாக விளக்கியுள்ள அரிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
முசுடு எறும்புகள்
முசுடு எறும்புகள் இனமானது ஒற்றுமைக்கு இலக்கணமாக வாழும் ஒரு அற்புதமான உயிரினமாக அறியப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் இதை பார்த்திருக்கின்ற போதும், இதன் அற்புதமாக குணங்கள் பற்றி அறிந்திருப்பது குறைவு.
இவை தங்கள் கூட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும். கூட்டில் தேவையற்ற குச்சிகள் அல்லது பொருட்கள் இருந்தால், அவற்றை உடனே அப்புறப்படுத்திவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்கும்.
அந்தளவுக்கு தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உயிரினமாகவும் காணப்படுகின்றது. இவை பெரிய இலைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் துண்டு துண்டாக மடித்து, ஒட்டி ஒரு கூடு போல உருவாக்கி அதனுள் வாழும் தன்மை கொண்டது.
இந்த இலைக் கூடு காய்ந்து போகும் வரை இவை அதில் வாழும். கூடு காய்ந்தவுடன், புதிய கூடு தயாரிக்கத் தொடங்கிவிடும். இந்தக் கூட்டில் முட்டைகள் இடுவதோடு, காயமடைந்த எறும்புகளையும் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ளும் குணம் இந்த எறும்புகளிடம் காணப்படுகின்றது.
இந்த எறும்பு இனம் குறித்து நபரொருவர் விளக்கம் கொடுத்துள்ள அரிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |