பூச்சிக் கடியை குணப்படுத்தும் பால்- எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பால் இல்லாத வீடுகளே இருக்க முடியாது.
நம்மில் பலர் காலையில் எழுந்தவுன் டீ அல்லது காபி குடித்த பின்னரே அன்றைய நாளை ஆரம்பிப்பார்கள்.
இதற்கு பால் மிகவும் அவசியம். பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை அளிக்கிறது.
ஒரு கிளாஸ் பால் பெரும்பாலும் முழு உணவாகக் கருதப்படுகிறது.
இதன்படி, பாலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின்கள், புரதம், வைட்டமின் டி, வைட்டமின் ஏ, துத்தநாகம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
பால் உணவாக மட்டுமல்ல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அவை என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பூச்சி கடியை குணப்படுத்தும் பால்
1. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சூடான நீர் குடித்து நாக்கின் சுவை மொட்டுகள் பாதித்து விட்டால் அப்போது பால் குடிக்கலாம். ஏனெனின் பாலில் இருக்கும் கேசீன் புரதம் எரியும் உணர்வை இல்லாமலாக்கி நாக்கை சரிப்படுத்தும்.
2. நாக்கின் எறிச்சலை போல் பால் தோலில் இருக்கும் அனைத்து எறிச்சலையும் போக்கும். அதிகமான வெயில், காயம் இப்படியான தாக்கங்கள் தோலில் ஏற்பட்டால் சருமம் எறிய ஆரம்பிக்கும். இது போன்ற நேரங்களில் பால் மற்றும் தேன் கலந்து கழுவ வேண்டும். இது பாக்டீரியா தாக்குதலை தடுத்து நிவாரணம் கொடுக்கும்.
3. பூச்சி அல்லது தேனீ கடித்து விட்டால் அந்த பகுதியை பாலில் ஊற வைக்க வேண்டும். பால் இல்லாவிட்டால் பால் பவுடர் மற்றும் தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். இது உடனடியாக நமைச்சலை நடுநிலையாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |