உங்களை கடனாளியாக்கும் இந்த பழக்கம் இருக்குதா? பணத்தை சேமிக்க அருமையான டிப்ஸ்
நம்மை கடனாளியாக்கும் பழக்கங்கள் விட்டு பணம் சேமிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான மனிதர்கள் தங்களது வருமானத்திற்கு மேல் கடன் வாங்கிக் கொண்டு அதனை செலுத்துவதற்கு பம்பரமாக ஓடி வருகின்றனர்.
தவணை முறையில் பல பொருட்களையும் வாங்கி வீட்டில் குவித்துவிடுவதால், வரும் மாதத்தில் தவணைக்கே சம்பளத்தை கொடுத்துவிட்டு, அந்த மாத செலவிற்காக கடன் வாங்கும் நிலைக்கு வந்துவிடுகின்றனர்.
கடன் என்ற வலையிலிருந்து மீள்வதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பணம் சேமிக்க வழி என்ன?
கடன் தான் ஒரு நபரின் சேமிப்பை குறைக்கின்றது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதிக வட்டி விகிதங்கள் கொண்ட கடன்களை கட்டுப்படுத்துவது நல்லது. ஏனெனில் அதிக வட்டி விகிதம் நீண்ட காலத்திற்கு உங்கள் சேமிப்பை அரித்துவிடுகின்றது.
உண்மையான தயாரிப்புகளை பணம் சற்று அதிகம் செலவழித்து வாங்கிக் கொள்ளலாம். தரம் குறைவாக இருக்கும் பொருட்களை குறைவான விலையில் வாங்கிவிட்டு, அதனை நீண்ட காலத்தில் பழுது பார்ப்பது, பராமரிப்பு, மீண்டும் புதிதாக வாங்குவது இதை தவிர்க்கவும்.
உங்களது மாதாந்திர செலவுகளை பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும். செலவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும் அதிகமான செலவுகள் நீங்கள் கட்டுப்படுத்தக்கூடியதாகவே இருக்கும். பட்ஜெட் போட்டால் செலவுகளை கண்காணித்து குறைப்பதற்கு உதவும்.
அதிக வட்டியிலான கடன்களை அடைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். பணத்தைச் சேமிக்க, அனைத்து கடன்களையும் விரைவாகச் செலுத்துவது நல்லதாகும். அதிக வட்டி விகிதங்களைக் கொண்ட கடன்களை அடைப்பது சிறந்தது ஆகும்.
அவசர காலத்திற்கு என்று நிதியை கட்டாயம் தனியாக எடுத்து வைக்க வேண்டும். நமது வீட்டு செலவுக்கு ஆகும் செலவுகளில் 3 முதல் 5 மடங்கு இருக்குமாறு அவசர கால நிதியை எடுத்து வைக்க வேண்டும். இவ்வாறு எடுத்து வைத்தால் தேவைப்படும் நேரத்தில் மற்றவர்களை நம்பாமல் உங்களுக்கு உதவும்.
கிரெடிட் கார்டுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கிரெடிட் கார்டு பயன்படுத்திவிட்டு, அதன் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் அடைக்க முடியவில்லை என்றால் அதன் வட்டி மிக அதிகம் ஆகும். மிகவும் தேவை என்றால் மட்டும் கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கொண்டு, நிலுவைத் தொகையை தாமதம் இல்லாமல் விரைவில் கட்டிவிடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |