இலவசமாக நெட்ஃபிளிக்ஸை ஆக்டிவேட் செய்யவேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க
உலக அளவில் பிரபலமான ஸ்ட்ரீமிங் உள்ள நிறுவனத்தில் ஒன்று தான் நெட்ஃபிளிக்ஸ். இதில் ரிலீஸ் ஆகும் வெப் சீரிஸ்கள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஆனால், இந்தியாவில் இதன் விலை உயர்வாக உள்ளது என பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதிரடியாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விலையையும் குறைத்தது.
இதனிடையே நெட்ஃபிளிக்ஸ் ப்ளானை எப்படி இலவசமாக ஆக்டிவேட் செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம். இதை செய்ய நீங்கள் முதலில் ஏர்டெல் பிளான் ஒன்றை பெற வேண்டும்.
டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது புதிய போஸ்ட்பெய்ட் யூஸர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது. அதுமட்டுமின்றி ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சர்விஸின் புதிய சப்ஸ்கிரைபராக இருந்தால், அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற இலவச OTT சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் சில நன்மைகளையும் பெறலாம்.
மேலும் The Fame Game, Space Force, Squid Game, Money Heist, Inventing Anna போன்ற பிரபலமான சீரிஸ்களையும் பார்த்து மகிழ முடியும். சரி அதை எப்படி இலவசமாக ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதையும் இங்கே பார்க்கலாம்..
ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளான்களின் விலை ரூ.1,199 மற்றும் ரூ.1,599-ஆக இருக்கிறது. இதில் ரூ.1,199 பிளான் Netflix-ன் பேசிக் ப்ளான் இலவசமாக வழங்குகிறது.
மேலும், 2 ஃபேமிலி ஆட்-ஆன் கனெக்ஷன்ஸ், மாதத்திற்கு 150GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது.
அடுத்ததாக, ரூ.1,599 போஸ்ட்பெய்ட் திட்டமானது Netflix ஸ்டாண்டர்ட் பிளான் அக்சஸை வழங்குகிறது. மேலும் 3 ஃபேமிலி ஆட்-ஆன் கனெக்ஷன்ஸ், மாதத்திற்கு 250GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது.
இந்த 2 பிளான்களுமே ஒரு வருட அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகின்றன. ஏர்டெல் போஸ்ட்பெய்டு ஃபேமிலி பிளானைதேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை எவ்வாறு ஆக்டிவேட்/கிளைம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
இலவசமாக பயன்படுத்தும் முறை
Airtel Thanks app-ஐ முதலில் பயன்படுத்தி ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பிளான்களில் இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை ஆக்டிவேட் செய்யலாம்.
*Airtel Thanks app-ல் கிடைக்கும் Discover Thanks Benefit பேஜ்ஜிற்கு செல்லவும்
*Enjoy your rewards செக்ஷனுக்கு சென்று நெட்ஃபிளிக்ஸ் Tab-ற்க்கு கீழே செல்லவும்
* அடுத்து Netflix வெப்சைட்டிற்கு சென்று Claim-ஐ டேப் செய்து பின் உங்கள் மொபைல் நம்பரை பதிவுசெய்து பாஸ்வேர்டை செட்டப் செய்வதன் மூலம் ஆக்டிவேஷன் ப்ராசஸை முடிக்கவும்.
* இந்த செயல்முறை முடிந்ததும் நீங்கள் இந்த சர்விஸை பயன்படுத்த தயாராகிவிடுவீர்கள்.