மானின் கழுத்தை கவ்விக்கொண்டு மரத்தில் சண்டையிட்ட 6 சிங்கங்கள்.... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
கடந்த சில வருடங்களாக சமூக ஊடக தளங்களில் விலங்குகளின் அழகான, வேடிக்கையான மற்றும் பயங்கரமான வீடியோக்கள் பல பகிரப்பட்டு வருகிறது.
அதுவும் சமீப காலமாக காடுகளில் வசிக்கும் விலங்குகளின் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், ஒரு மான் சடலத்திற்காக ஆறு சிங்கங்கள் சண்டையிடும் வீடியோ கிளிப் ஒன்று இணையத்தினுள் பரவலான மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
एक शिकार, कई हकदार !!
— Saket (@Saket_Badola) August 20, 2021
The way of the Wild. #SMForward #Nature #Wildlife @susantananda3 pic.twitter.com/pYhm1HoY28
வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு சிங்கம் மான் சடலத்தின் கழுத்து பகுதியை கவ்விக் கொண்டு ஒரு மரத்தின் மீது எறியுள்ளது.
எப்படியாவது அந்த சடலத்தை தன்வசம் பிடிக்க வேண்டும் என்பதற்காக மற்றொரு சிங்கம் மான் சடலத்தின் காலை கவ்வி கொண்டு வலுவாக இழுக்கிறது.
அதுவும் மரத்தில் தொங்கியபடி. இதனிடையே மரத்தில் மேலே மூன்றாவதாக ஒரு சிங்கமும் இருந்தது. ஆனால் இது இரையை பிடிக்கும் மற்ற சிங்கங்களின் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
தற்போது அந்த வீடியோவில் நான்காவது சிங்கம் ஒன்று மரத்தின் மீது ஏறி, மானின் உடலை கவ்விக்கொண்டது. மரத்தின் அடிவாரத்தில் மேலும் இரண்டு சிங்கங்கள் இரைக்காக நின்று கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மரத்தின் மேலே மானின் கழுத்தை கவ்விக்கொண்டிருந்த சிங்கம் மற்ற சிங்கங்களின் செய்கையால் பளு தாங்கமுடியாமல் இறைச்சியை கீழே விட்டு விடுகிறது.
சடலம் தரையில் விழுந்தவுடன் ஆறு சிங்கங்களும் தங்கள் உணவுக்காக சண்டையிடத் தொடங்குகின்றன. சிங்கங்களுக்குள் நடந்த சண்டையைக் கண்டு சம்பவத்தைப் பதிவு செய்துகொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.