பிரான்சில் வேகமெடுத்த 3-வது அலை கொரோனா.. அதிரடியாக அந்நாட்டு அரசு எடுத்த முடிவு!
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், குறிப்பிட மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்து வருகின்றன. இதனையடுத்து, பிரான்சில் கடந்த நாளில் மட்டுமே 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனா தொற்று எண்ணிக்கை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, தற்போது பிரான்சில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், பிரான்சின் பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்த நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்த தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
மேலும், இந்த தடுப்பூசி குறித்து ஐரோப்பிய மருந்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. அதன் முடிவுகள் வந்த பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கப்படும் எனவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.