தனது ஊழியர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு வழங்கிய இலங்கை றீ(ச்)ஷா
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் சுய தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை றீ(ச்)ஷா வழங்கியுள்ளது.
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை றீ(ச்)ஷா சுற்றுலா தளமானனது கொண்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் மண் விவசாயத்துக்கு உகந்த மண் இல்லை என்றாலும் மண்ணின் தன்மையை மாற்றி சொட்டு நீர்பாசன முறையின் மூலம் கொய்யா,மாதுளை மற்றும் தர்பூசணி போன்ற பயிர்செய்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், றீ(ச்)ஷா பண்ணையில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களும் ஒரு பகுதி நிலத்தில் தர்ப்பூசணி காய்களை பயிரிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
தற்போது, இந்த தர்ப்பூசணி காய்கள் அறுவடை செய்யப்பட்டு சந்தைப்படுத்தலுக்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.