குளிர்காலத்தில் Water heater பயன்படுத்துபவரா? இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
தற்போது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குளிர் காலம் ஆரம்பமாகியுள்ளது.
இதனால் காலையில் எழுந்து சுடு நீரில் குளிப்பதற்கு பலரும் விரும்புவார்கள். கிராமங்களில் விறகடுப்புகளில் வெந்நீர் வைத்துக் குளிப்பார்கள்.
நகரங்களில் வாழ்பவர்கள் கேஸ் அடுப்பு அல்லது ஹீட்டர்களில் தான் சுடு தண்ணீர் போட்டு குளிக்கிறார்கள்.
மேலும், எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தினால் மின்சார செலவு கொஞ்சம் அதிகமாகும். அதிக விலை கொடுத்து வீட்டில் கீசர் அல்லது சோலார் வாட்டர் ஹீட்டர் வாங்க முடியாதவர்கள் இது போன்ற வழிகளில் தண்ணீர் சூடுப்படுத்தி குளிப்பார்கள்.
சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் வாட்டர் ஹீட்டர்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். இதனை நாம் நினைத்தப்படி பயன்படுத்தினால் சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
வாட்டர் ஹீட்டர் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள்
1. வாட்டர் ஹீட்டர்களை குளியலறையில் வைத்து பயன்படுத்த கூடாது. ஏனெனின் ஈரமான பகுதியில் வைத்து பயன்படுத்தினால் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.
2. வாட்டர் ஹீட்டர் கம்பி முழுவதுமாக தண்ணீரில் மூழ்கிய பிறகு அதனை இயக்குவது அவசியம். தண்ணீர் சூடாகி விட்டதா? என்பதை தெரிந்து கொள்ள தண்ணீரில் விரலை வைத்து பார்க்ககூடாது. இப்படி செய்தால் மின்சாரம் தாக்கும் ஜாக்கிரதை.
3. வாட்டர் ஹீட்டரை அணைத்து 10 நிமிடங்களுக்குப் பிறகு தான் ஹீட்டர் ராடை தண்ணீரில் இருந்து அகற்ற வேண்டும்.
4. பிளாஸ்டிக் வாளிகளில் வாட்டர் ஹீட்டரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இதனால் வெடிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.
5. இரும்பு வாளிகளில் வைத்து ஹீட்டரை பயன்படுத்தக் கூடாது. இதற்குப் பதிலாக எஃகு, அலுமினியம் அல்லது மற்ற உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |