உலகிலேயே விலையுர்ந்த தண்ணீர் பாட்டில் - விலையை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க
அன்றாடம் உலகில் பல விதமான ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதிலும் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறித்து பல வகைகளை கேள்விப்பட்டிருப்போம்.
வைரம், தங்கம், வெள்ளி உட்பட சில பொருட்கள் விலை உயர்ந்ததாக கருதுகின்றனர். ஆனால் சில சமயத்தில் நமக்கு தேவைக்கு தினந்தோறும் பயன்படுத்தும் சில பொருட்களின் விலை குறித்த தகவல்கள் தான், அதன் விலை தங்கம், வெள்ளி மற்றும் வைரங்களை விட மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது.
அது தான் தண்ணீர். தண்ணீர் பாட்டில்களின் விற்கும் சில விலைகளை கேட்டாலே தலையே சுற்றிவிடும். நீங்கள் ஒரு பாட்டில் குடிநீருக்காக வாங்க இதுவரை 15 அல்லது 20 ரூபாய் செலவழித்திருப்போம்.
அதுவே தியேட்டர், விமான நிலையங்களில் ஒரு பாட்டில் தண்ணீருக்கு 100 முதல் 150 வரை செலவாகியிருக்கும். ஆனால், இன்று நாம் பேசும் தண்ணீர் பாட்டில் பல லட்சம் மதிப்புடையது.
ஆம், இந்த தண்ணீரின் ஒவ்வொரு துளியும் விலைமதிப்பற்றது. ஏனெனில் இந்த தண்ணீரின் ஒரு பாட்டில் விலை 65 லட்சம் ரூபாய் ஆகும். பல பிரபலங்கள் ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கில் தண்ணீரை வாங்குகிறார்கள்.
ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு லிட்டர் ப்ளாக் வாட்டரின் விலை ரூ.4000 என கூறப்படுகிறது.
இவ்வளவா?
பேவர்லி ஹில்ஸ் (Beverly Hills) 90ஹெச்20 (90H20) தண்ணீர் பாட்டிலின் விலை 65 லட்சம் ரூபாய்.
அதாவது, இந்த பாட்டிலில் இருக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடையது.
உண்மையில், பேவர்லி என்ற நிறுவனம் இந்த தண்ணீர் பாட்டிலை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த பாட்டிலின் மூடி 14 காரட் வெள்ளைத் தங்கத்தால் ஆனது. இதை தவிர, அதன் மூடியில் 250 வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது.