ஸ்கூட்டரில் மறைந்திருந்திருந்து படமெடுத்த நாகம்... நொடியில் பதற வைக்கும் அதிர்ச்சி காட்சி!
ஸ்கூட்டரில் மறைந்திருந்த பாம்பு ஒன்றை மீட்கும் காட்சிகள் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.
கனமழையின் காரணமாக பாம்பு அந்த ஸ்கூட்டருக்குள் பதுங்கி உள்ளது.
சாலையின் நடுவே பொதுமக்கள் முன்னிலையில் பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் அதனை பத்திரமாக மீட்டுள்ளார்.
Such guests during rains are common...
— Susanta Nanda IFS (@susantananda3) September 7, 2021
But uncommon is the method used to rescue it. Never ever try this? pic.twitter.com/zS4h5tDBe8
பாம்பை மீட்பதற்காக அவர் காலியாக இருக்கும் வாட்டர் கேன் ஒன்றை பயன்படுத்துகிறார். காலியாக இருக்கும் வாட்டர் கேனில் அந்த பாம்பினை போக வைக்க அதன் அருகே கொண்டு செல்கிறார்.
பாம்பின் போக்கிற்கு அவரும் சென்று லாவகமாக அதனை வாட்டர் கேனிற்குள் கொண்டு வந்தார்.
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுப்போன்று யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.