வீட்டில் குளவி கூடு கட்டினால் கெட்ட சகுனமா? உண்மை இதுதானாம்
குளவிகள் வீட்டில் கூடு கட்டினால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் குளவி கூடு
பொதுவாக வீடுகளிலோ, வீட்டின் அருகிலோ தேனீ கூடு கட்டிருந்தால் அது எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்றும், அதுவே குளவி கூடு கட்டிருந்தால் நல்ல சகுனம் என்று கூறப்படுகினறது.
ஏனெனில் தூய்மையான மண்ணை கொண்டு மிகவும் கவனமாக குளவி கூடு கட்டுமாம். மரத்தில் இருந்து மரத்தூளை கொண்டு வந்து, பற்களால் கடித்து அதனை மென்மையாகி, அதில் தனது எச்சிலை கலந்து தான் குளவி கூடு கட்டுமாம்.
அறுகோண வடிவில் கட்டும் இந்த கூட்டில் அறைகளை அமைக்கும் குளவி ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒவ்வொரு முட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ளுமாம்.
நல்ல சகுனமா?
இவ்வாறு குளவி ஒரு வீட்டில் கூடு கட்டியிருந்தால், அந்த வீட்டில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் என்றும் நிதி ஆதாயம் சீராக இருக்கும், கடன் எளிதில் அடையும், கடனாக கொடுக்கப்பட்ட பணமும் சிரமம் இல்லாமல் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
அதுவே குளவி பூஜை அறையில் கூடு கட்டியிருந்தால் மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது. வடகிழக்கு மூளையில் கூடுகட்டியிருந்தால் எக்காரணம் கொண்டும் அதனை கலைக்கக்கூடாதாம்.
ஆனால் சமையலறையில் குளவி கூடு கட்டியிருந்தால் அபச குணமாகவும், நிதி ஆதாரம் குறைந்து வறுமையை ஏற்படுத்தும் என்று அர்த்தம்.
புதிதாக ஒரு கூட்டை கட்டி அதிலிருந்து குளவி வெளியேறிவிட்டால் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் வரும் என்று அர்த்தமாம். இதனால் அந்த கூட்டை உடனே கலைத்து அப்புறப்படுத்த வேண்டுமாம்.
குளவி விஷத்தன்மை வாய்ந்தது என்பதால் குளவி எதிர்பாராமல் கொட்டிவிட்டால் அதன் விஷம் உடல் முழுவதும் ஏறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குளவி கொட்டிய இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவினால் விஷம் ஏறாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் குளவி கூடு கட்டினால் அதை கலைத்துவிட்டு, அவ்விடத்தில் கோமியத்தை தெளித்தால் குளவி மீண்டும் கூடு கட்டாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |