அரிசி கழுவும் போது இந்த தவறை செய்யாதீங்க... காரணம் இதோ
அரிசி கழுவும் போது நாம் செய்யும் சில தவறுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
அரிசி கழுவும் போது செய்யக்கூடாத தவறுகள்
பொதுவாக சமைக்கும் போது அரிசியை ஊற வைத்து சமைக்கும் பழக்கத்தை தான் பலரும் தற்போது செய்து வருகின்றனர். ஊற வைத்து கழுவும் அரிசியை நன்றாக பிசைந்து கழுவுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
ஆனால் அவ்வாறு பிசைந்து கழுவும் அளவிற்கு அரிசியில் அழுக்கு சேர்வது இல்லை. ஏற்கனவே இயந்திரங்களில் சிக்கி வெளியே வரும் அரிசியை நாம் கழுவுகிறேன் என்று இவ்வாறு செய்தால் அரிசி முழுவதும் குருணையாக உடைந்துவிடுமாம்.
ஆதலால் அரிசியை கழுவும் போது இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் கழுவ வேண்டும். அதிலும் காற்றில் இலை அசையும் விதமாக அரிசியை கழுவினால் போதுமாம்.
மேலும் விவசாயிகளின் பல கஷ்டத்திற்கு பின்பு நமது கையில் கிடைக்கும் அரிசியை கழுவும் போது சிலவற்றை பாத்திரம் கழுவும் தொட்டியில் சிந்தாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |