10 நிமிடத்திற்கு மேல் டாய்லெட்டில் இருக்கீங்களா? மிகப்பெரிய ஆபத்து ஏற்படுமாம்
டாய்லெட்டில் 10 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் ஒவ்வொருவரது கையில் மொபைல் போன் என்பது மிகவும் சாதாரணமாகியுள்ளது. எந்த இடத்திற்கு சென்றாலும் மொபைல் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

குறிப்பாக பாத்ரூம் செல்லும் போது கூட மொபைல் போனை கொண்டு செல்வதுடன், கழிவறையில் அமர்ந்து கொண்டு ரீல்ஸ், வாட்ஸ் அப், ஷாட்ஸ் இவற்றினை பார்க்கின்றனர்.
இதனால் நேரம் போவது கூட தெரியாமல் அதிக நேரம் கழிப்பறையில் அமர்ந்திருக்கும் நிலை உள்ளது. அவ்வாறு 10 நிமிடத்திற்கு மேல் கழிவறையில் அமர்ந்திருந்தால் என்னென்ன பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

பாதிப்புகள் என்ன?
கழிவறையில் அமர்வதற்கு அமைக்கப்பட்டிருக்கும் இருக்கையின் வடிவமைப்பு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதாவது மனிதனை புவியீர்ப்பு விசையானது தரையில் நிறுத்துவதற்கு மட்டுமின்றி, ரத்தத்தினை மீண்டும் இதயத்திற்கு எடுத்துச் செல்லும் கடினமான வேலையையும் செய்கின்றது.
கழிவறையில் முட்டை வடிவில் இருக்கும் இருக்கை வழக்கமான நாற்காலியை விட தாழ்வாக இருக்கின்றது. இதனால் புவியீர்ப்பு விசையால் இடுப்பின் மீது அழுத்தம் அதிகரித்து குடல் சரிவு போன்ற பிரச்சனை ஏற்படும்.

அதிக நேரம் அமர்ந்து கழிவறையில் இருப்பது, ரத்த நாளங்கள் வீங்கவும், மூல நோய் அபாயத்திற்கும் வழிவகுக்கும்.
அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால் இடுப்பு தசைகளும் அதிகமாக பாதிப்பினை சந்திக்கின்றது.
ஒருசிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை, ரத்தம் வடிதல், வேறு பிரச்சனைகளும் ஏற்படும். மலம் கழிக்கும் போது ரத்தம் வடியும் பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |