இந்த தவறுகளை செய்யாதீர்கள்! கடன் வாங்குவதில் பாரிய சிக்கல் ஏற்படும்
கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் சில தவறுகளை செய்யாமல் உஷாராக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கும் பதிவே இதுவாகும்.
கிரெடிட் ஸ்கோர்
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் தங்களது வருமானத்தை வைத்து நினைத்த பொருட்களை வாங்கமுடியாத பட்சத்தில், அதனை தவணை முறையில் வாங்கும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறு தவணைமுறையில் வாங்கு பொருட்களுக்கு நாம் சரியாக பணம் கட்டிவிட்டால் அதற்கான ஸ்கோர் ஒன்று நமது பெயரில் அதிகரித்து வரும்.
இதனை கிரெடிட் ஸ்கோர் என்று கூறப்படும் நிலையில், இதனை வைத்தே ஒரு நபருக்கு கடன் கொடுப்பதை அந்தந்த நிறுவனம் தீர்மானிக்கின்றது.
ஆதலால் உங்களது கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.
ஏதேனும் சில காரணங்களால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்தால், அதனை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.
குறைந்தது 300 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் மதிப்பெண்கள் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர்கள் உடனடியாக வழங்கி விடுவார்கள்.
பெரும்பாலான வங்கிகளில் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கும் 58 வயதுக்குட்டவர்களுக்கும் கடன் வழங்கப்படும். தற்போது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் செயல்களை குறித்து பார்க்கலாம்.
கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் விடயங்கள்
நீங்கள் குறிப்பிட்ட தேதியில் தவணையை கட்டாமல் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும. அவ்வாறு ஏற்பட்டால் உங்களது கிரெடிட் ஸ்கோர் அளவு பாதிக்கப்படும்.
நீங்கள் வாங்கியிருக்கும் கடனை எத்தனை மாதங்களில் திரும்பி செலுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப உங்களது தவணைத் தொகையை செலுத்தவும். நல்ல நிலைமையில் உங்களது கடன் வரலாறு இருக்க வேண்டம்.
புதிதாக கடன் பெறுபவர்களாக நீங்கள் இருந்தால் உங்களது கிரெடிட் ஸ்கோரை கட்டாயம் பார்க்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.