வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர்... உடல் எடையை கடகடவென குறைக்கலாம்
காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருகினால் உடலில் பல பிரச்சினைகள் சரியாவதாக சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வெறும் வயிற்றில் வெந்நீரை குடித்தால் என்ன பலன்
நமது முன்னோர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருகுவதால், உடலில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு இருப்பதாக நம்பிக்கை இருந்துள்ளது.
காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருகினால் வளர்சிதை மாற்றத்தினை துரிதப்படுத்துவதுடன், செரிமானத்திற்கும் உதவியாக இருக்கும்.
இயற்கை நச்சு நீக்கியாக செயல்படும் வெந்நீரை காலையில் குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நச்சுகளை அகற்றவும், வெப்ப நிலையை அதிகரிக்கவும் செய்கினற்து. இதனால் வியார்வையில் உடம்பில் தேங்கியுள்ள அழுக்குகள் வெளியேறுகின்றது.
எடையைக் குறைப்பதற்கு முயற்சி செய்பவர்கள் காலையில் கட்டாயம் வெதுவெதுப்பான நீரை பருகவும். வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதுடன், கலோரிகளையும் எரிக்க உதவி செய்கின்றது.
காலையில் நீங்கள் பருகும் வெதுவெதுப்பான நீர் உடலை நாள்முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்கின்றது.
அடிக்கடி குடித்தால் ஆபத்து
காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் இருக்கும் போது வெதுவெதுப்பான நீரை அருந்துவது நல்லதே.
ஆனால் மிகவும் சூடான நீர் அருந்துவது வாய், தொண்டை மற்றும் உள்ளுறுப்பு சவ்வில் புண் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தலாம்.
அளவுக்கு அதிகமாக வெந்நீர் குடிப்பது சிறுநீரகத்தின் வேலையை அதிகரிக்கும்.
குறிப்பாக இரவில் படுக்கும் முன்பு வெந்நீர் அருந்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். ஆகவே அளவான சூடுடன் குடிப்பது மிகவும் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |