கண்ணாடி போல ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? தேங்காய் எண்ணெயில் இதை கலந்து பூசுங்க
தற்போது இருக்கும் பலுவ நிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக அதிகமான சரும பிரச்சனைகள் வருகின்றது. இதற்கு பலரும் பல வைகயான கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
இதில் சிலவை நல்ல பலன் தரும் அதுவும் அதிக நாட்களுக்கு நீடிக்காது. சிலவை தீய பலன்களையும் தரும்.
இதை தவிர்த்துக்கொள்ள நாம் இயற்கையில் காணப்படும் பொருட்களை பயன்படுத்தினால் அது நமது சருமத்தை பாதுகாப்பதுடன் அதற்கு பல பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். அது என்னென்ன வழிமுறைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சரும பாதுகாப்பு
சருமத்தில் சுருக்கம் வறட்ச்சி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயுடன் தேன் கலந்து தினமும் முகத்தில் தடவி வந்தால், மிகக் குறைந்த நேரத்திலேயே முகத்தில் உள்ள சுருக்கங்களை நிரந்தரமாக போகும்.
இதை முகத்திற்கு தடவ ஒரு நேரம் உள்ளது. தினமும் உறங்க முன்னர் இதை முகத்தில் தடவி கழுவிய பின்னர் உறங்க வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு தடவை செய்தால் போதும்.இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து இளமையான சருமம் கிடைக்கும்.
தேனில் இயற்கையான ஈரப்பதம் உள்ளது. இதன் காரணமாக இது சருமத்திற்கு இயற்கை ஈரப்பதத்தை கொடுக்கிறது.வறண்ட சருமத்தை கொண்டவர்கள் இந்த தேனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூசலாம்.
தேங்காய் எண்ணெய் சருமத்தில் இருக்கக்கூடிய கொலகொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால், சருமம் சுருங்குவது, தொய்வடைவது போன்றவை தடுக்கப்படுகின்றன.
சருமம் இறுக்கமாகி, இளமையாகத் தெரியும்.சூரிய ஒளியால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்து சருமத்தை கண்ணாடி போல மாற்றும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |