Facial Massage: முகத்தை இளமையாக வைத்திருக்க வேண்டுமா?
ஆண்களைவிட பெண்கள் சருமத்தை அழகாக வைத்திருப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். இதற்காக அழகுாசதனப்பொருட்கள் நிறையவே பயன்படுத்துகின்றனர். ஆனால் இது உடலுக்கும் சருமத்திற்கும் நல்லதல்ல. நாம் நமது சருமத்தை இயற்கையான வழிமுறைகளை கொண்டே சரி செய்ய முடியும்.
ஆனால் இப்போது இருக்கும் சமூகம் இதை கண்டுகொள்வதில்லை. நமது சருமத்தில் நிறைய பிரச்சனை வருவதற்கான காரணம் ரத்த ஓட்டம் இல்லாதது தான்.
இது சரிவர இருந்தால் முகத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு நாம் செய்யக்கூடிய சில மசாஜ்கள் இருக்கின்றது. அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சரும ஆரோக்கியம்
முகத்தில் உள்ள தசைகளை நாம் மசாஜ் செய்யும் போது உங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
இது சருமத்தின் நிறத்தை சீராக்குகிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மன அழுத்தமாக இருந்தால் அது நமது முகத்தில் காட்டும் இதற்கு காரணம் நமது முகத்தின் தோல் பகுதிகளில் புத்துணர்ச்சி இல்லாததுதான்.
நீங்கள் கைகளை கொண்டு மசாஜ் செய்யும் போது மன அழுத்தம் குறைந்து முகம் பொலிவு பெறும். இது உங்கள் சருமத்தை உற்சாகப்படுத்தவும், பதற்றத்தை குறைக்கவும் உதவுகிறது.
இது ஆய்வு ரீதியாக கூறப்பட்டதாகும். நமது உடலில் ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். முக தசைகளை மசாஜ் செய்வது உங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருந்தால் சரும நிறம் அதிகரிக்கும்.
முக மசாஜ் சைனஸ் அழுத்தம், அசௌகரியம் மற்றும் நெரிசலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். இது சளியை வெளியேற்ற உதவுகிறது மற்றும் தலைவலியைப் போக்க உதவுகிறது.
இந்த மசாஜ் மாதத்திற்கு ஒரு முறையாவது செய்தால் அது நச்சுக்களை வெளியேற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மெல்லிய கோடுகள் மற்றும் முகப்பருவை குறைக்க உதவுகிறது மற்றும் இறந்த சரும செல்களை நீக்குகிறது.
வயதானது போல முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைப்பதற்கும் சருமத்தின் அமைப்பை மேம்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் முகத்தை ஓய்வெடுக்க வைக்கிறது மற்றும் வயதான செயல்முறையை குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |