அதிகப்படியான கடன் தொல்லையிலிருந்து மீள வேண்டுமா? இந்த பரிகாரத்தை தினந்தோறும் செய்து பாருங்க
வாழ்க்கையில் எவ்வளவுதான் கஷ்டத்தை நாம் எதிர்கொண்டாலும் அந்த கஷ்டத்தை தீர்ப்பதற்கு கடன் மட்டும் வாங்கி விடக்கூடாது.
அதுவும் அதிக கடன் வாங்கி விட்டால் நம் தலையை அடமானம் வைத்தால் கூட அந்த கடனை நம்மால் அடக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
இப்பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் உள்ளது. அதனை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
பரிகாரம்
காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளாக செய்து விட வேண்டும். முதலில் இந்த பரிகாரம் செய்வதற்கு குளித்து முடித்த பின் பூஜை அறையில் தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு சிகப்பு துணி எடுத்து அதில் 10 கரு மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கொட்டைப்பாக்கும், கொஞ்சம் சில்லரை காசுகள் இவை மூன்றையும் ஒன்றாக அந்த சிகப்பு துணியில் வைத்து ஒரு முடிச்சாக போட்டுக் கொள்ளுங்கள்.
இதை மண்பானையோ அல்லது குடுவையோ ஏதாவது ஒன்றில் இந்த முடிச்சை போட்டு விடுங்கள்.

நீங்கள் யாரிடம் வாங்கிய கடன் அடையவில்லையோ அந்த குறிப்பிட்ட நபரின் பெயரை எழுதி ‘இவரிடம் வாங்கிய கடன் விரைவில் அடைய வேண்டும்’ என எழுதி, இந்த குடுவையில் போட்டு விடுங்கள்.
உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு இந்த கடனை அடைக்கும் முயற்சியை நீங்கள் தொடங்குங்கள். இந்த குடுவை பூஜை அறையில் இருந்தாலும் சரி, நீங்கள் பணம் வைக்கும் பீரோவில் இருந்தாலும் சரி, ஆனால் யாரும் கை பாடாத இடமாக பார்த்து வைத்து விடுங்கள்.
கடன் அடைந்த பிறகு இந்த நாணயத்தை கோவிலுக்கு தர்ம காரியத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொட்டைப்பாக்கையும், கருமிளகையும், ஓடும் நீர் நிலையில் விட்டு விடுங்கள். இல்லை எனில் யாரும் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த பரிகாரம் நிச்சயமாக உங்கள் வாழ்வில் கடன் பிரச்சினை நீக்கி ஒரு நல்ல மாற்றத்தை தரும்.
முக்கிய குறிப்பு
பரிகாரத்தை செய்து விட்டோமே, என்று நாம் அமர்ந்து கொண்டே இருந்தால் கடன் அடைந்து விடாது. அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள்.
அந்த முயற்சி கட்டாயம் பலன் அளிக்கக்கூடிய ஆற்றலை இந்த பரிகாரம் தரும். தினந்தோறும் தீபம் ஏற்றும் போது இந்த கடன் அடைய வேண்டும் என்று சொல்லி வேண்டிக் கொண்டே வாருங்கள். விரைவிலே உங்கள் கடன் அடைந்துவிடும்.